அமெரிக்க எம்.பி.,க்கள் பேச்சு; பாக்., பிரதமர் இம்ரான் வேதனை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
இஸ்லாமாபாத்-“ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.''ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க எம்.பி.,க்கள் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது,” என, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.நம் அண்டை நாடான பாக்., பிரதமர் இம்ரான் கான், 'ரஷ்யா டுடே' என்ற பத்திரிகைக்கு அளித்த

இஸ்லாமாபாத்-“ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.''ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க எம்.பி.,க்கள் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது,” என, பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.



latest tamil news


நம் அண்டை நாடான பாக்., பிரதமர் இம்ரான் கான், 'ரஷ்யா டுடே' என்ற பத்திரிகைக்கு அளித்த பேட்டி:அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்த நேரத்தில் பாகிஸ்தான் மிகவும் பதற்றமான சூழ்நிலையில் இருந்தது. அந்த காலகட்டத்தில்தான் முஷாரப் ராணுவ புரட்சி வாயிலாக ஆட்சியை கைப்பற்றினார். முஷாரப் பாக்.,கில் தன் ஆட்சியை நடத்த அமெரிக்காவின் உதவியை நாடினார். அது தான் மிகப்பெரிய தவறு.மேலும் ரஷ்யாவுக்கு எதிராக முஜாஹிதீன்களை அமெரிக்கா வளர்த்தது. அந்த நேரத்தில் பாகிஸ்தான் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்தது


latest tamil news


ஆப்கானிஸ்தானில் ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு எதிராக தலிபான்கள் போராடுவதற்கு அமெரிக்காவின் விருப்பப்படிதான் தலிபான்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக பாகிஸ்தான் மிகப் பெரும் விலை கொடுத்துள்ளது. ஆனால் அமெரிக்க எம்.பி.,க்கள் பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்ததாக பேசியிருப்பது மிகுந்த வேதனை ஏற்படுத்தியுள்ளது. எங்களை குறை கூறுவது நியாயமற்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
20-செப்-202118:21:43 IST Report Abuse
r.sundaram கடந்த இருபது வருடங்களாக தாலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்காவுக்கு போக்கு காட்டிவிட்டு, அமெரிக்காவின் உதவியை அனுபவித்தது தான் பாகிஸ்தானின், அமெரிக்க உதவி. இதை அமெரிக்கர்களும் உணர வில்லை. ஆனால் எதற்கும் ஒரு முடிவு உண்டு அல்லவா? என்று பாகிஸ்தான் இந்த உலக வரைபடத்தில் இருந்து நீக்கம் செய்ய படுகிறதோ, அன்றே இந்த உலகில் தீவிரவாதம் மறையும். இதையும் உலகம் மிக விரைவில் உணரும், அந்த நாள் அதிக தூரம் இல்லை.
Rate this:
Cancel
தமிழன் - madurai,இந்தியா
20-செப்-202116:12:58 IST Report Abuse
தமிழன் எனக்கு ஒரு சந்தேகம், உலகத்துல எண்ணை தேவையில்லை என்றாகிவிட்டால் அமெரிக்கா மற்றும் மூர்க்க நாடுகளின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? கிட்டத்தட்ட 200 வருஷம், பெட்ரோலை வச்சு இவனுங்க வண்டிய ஒட்டியாச்சு, நவ் வாட் நெக்ஸ்ட்?
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-202106:18:18 IST Report Abuse
 Muruga Velமாட்டு வண்டி ..குதிரை சவாரி .....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-202112:40:17 IST Report Abuse
Ramesh Sargam பாக்கிஸ்தான் அழிவு அவர்கள் கையிலேயே. ஆம், அவர்கள் விதைத்த தீவிரவாதத்திலேயே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X