பொது செய்தி

இந்தியா

'பாண்டி மெரினா'வில் பார்க்கிங் கட்டணம்

Added : செப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வாகன பாதுகாப்பிற்கு எந்த வசதியும் செய்யாமல், பாண்டி மெரினா பீச்சில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே, 'பாண்டி மெரினா பீச்' கடந்த 2019ம் ஆண்டு திறக்கப்பட்டது.அங்கு வணிக வளாகம், உணவு அரங்குகள், குடில்கள், குழந்தைகளை மகிழ்

புதுச்சேரி : வாகன பாதுகாப்பிற்கு எந்த வசதியும் செய்யாமல், பாண்டி மெரினா பீச்சில் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிப்பதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், வம்பாகீரப்பாளையம் கலங்கரை விளக்கம் அருகே, 'பாண்டி மெரினா பீச்' கடந்த 2019ம் ஆண்டு திறக்கப்பட்டது.அங்கு வணிக வளாகம், உணவு அரங்குகள், குடில்கள், குழந்தைகளை மகிழ் விக்க பல்வேறு விளையாட்டு சாதனங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.இந்நிலையில், நிதி நெருக்கடியில் தள்ளாடி வரும் புதுச்சேரி நகராட்சி, 'பாண்டி மெரினா பீச்'சில் நேற்று முதல் 'பார்க்கிங்' கட்டணம் வசூலிக்க அனுமதி அளித்துள்ளது.கார்களுக்கு 30 ரூபாயும், மோட்டார் பைக்குகளுக்கு 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.

இது, சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மத்தி யில் கடும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தில் ஒரு பகுதி தொகையில் வாகனங்களின் பாதுகாப்பிற்கான வசதிகள் செய்து தர வேண்டும். ஆனால் இங்கு வாகனங்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.பாண்டி மெரினாவில் வாகனங்களை நிறுத்த தனி இடம் ஒதுக்கப்படவில்லை. இங்கு, 'சாகர்மாலா' திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. அதனால் பாண்டி மெரினா சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்த சாலையில்தான் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர், கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் பார்க்கிங் இடத்தில் செய்து கொடுக்கப்படவில்லை.வெயில், மழையில் தான் வாகனங்கள் நிறுத்த வேண்டும்.

வாகன திருட்டை தடுப்பதற்கான பாதுகாப்பு அம்சங்களும் மேற்கொள்ளப்படவில்லை.இவ்வாறு எத்தகைய வசதிகளும் செய்யாமல், வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது, பாண்டி மெரினா பீச்சுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை குறைய செய்துவிடும்.எனவே, பாண்டி மெரினாவில் வாகனங்களின் பாதுகாப்பினை உறுதி செய்துவிட்டு, பார்க்கிங் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X