பொது செய்தி

இந்தியா

புதிதாக 79 பேருக்கு தொற்று

Added : செப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,765 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 79 பேருக்கு தொற்று உறுதியானது.இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து,

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 79 பேருக்கு தொற்று உறுதியானது. தொற்று பாதித்த இருவர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,765 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 79 பேருக்கு தொற்று உறுதியானது.இதனால் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 463 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 78 பேர் குணமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 709 ஆக உயர்ந்தது. மருத்துவமனைகளில் 161 பேரும், வீட்டு தனிமையில் 762 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.நேற்று முன்தினம் காரைக்காலில் 67 வயது முதியவர், மாகியில் 59 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை 1821 ஆக உயர்ந்துள்ளது.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.66 சதவீதமாகவும், இறப்பு 1.46 சதவீமாகவும் உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.80 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் மருத்துவப்பணியாளர்கள் 13 பேர், பொது மக்கள் 2677 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X