பொது செய்தி

இந்தியா

முதல்வரின் தொலைநோக்கு பார்வையால் கொரோனாவை எதிர்கொண்டோம்; அமைச்சர் லட்சுமிநாராயணன் பேச்சு

Added : செப் 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''முதல்வர் ரங்கசாமியின் தொலைநோக்கு பார்வையினால் தான் கொரோனாவை எதிர்கொள்ள முடிந்தது'' என அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.புதுச்சேரி செவிலியர் நலச் சங்கம் சார்பில், செவிலியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 700 பேர் கலந்து கொண்டனர்.பரிசளிப்பு விழா, புதுச்சேரி அரசு மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.சங்கத் தலைவி


புதுச்சேரி : ''முதல்வர் ரங்கசாமியின் தொலைநோக்கு பார்வையினால் தான் கொரோனாவை எதிர்கொள்ள முடிந்தது'' என அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசினார்.

புதுச்சேரி செவிலியர் நலச் சங்கம் சார்பில், செவிலியர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. 700 பேர் கலந்து கொண்டனர்.பரிசளிப்பு விழா, புதுச்சேரி அரசு மருத்துவமனை கருத்தரங்க கூடத்தில் நேற்று நடந்தது.சங்கத் தலைவி ஜானகி வரவேற்றார். சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேல், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாபன், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லுாரி இயக்குனர் உதயசங்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.போட்டிகளில் வென்ற செவிலியர்களுக்கு பரிசு வழங்கி அமைச்சர் லட்சுமிநாராயணன் பேசியதாவது:

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்தபோது மற்ற மாநிலங்கள் மிரட்சியுடன் இருந்தன. புதுச்சேரியில் அந்த சூழல் ஏற்படவில்லை.அரசு மருத்துவ கல்லுாரியை 600 படுக்கை வசதியுடன் ஆரம்பித்து இருந்ததால், கொரோனாவை எதிர்கொள்ள முடிந்தது. இதற்கு முதல்வர் ரங்கசாமியின் தொலைநோக்கு பார்வை தான் காரணம். புதுச்சேரி அரசு கல்வி, சுகாதாரம் என இரண்டு துறைகளில் மத்திய அரசிடம் பல விருதுகளை பெறுகிறது. சுகாதாரத் துறையின் சாதனைக்கு டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த இதர ஊழியர்கள் அனைவரும் காரணம்.கொரோனா சூழலில் மரணத்தை எதிர்கொண்டு மக்களின் உயிர்களை காக்கும் பணியில் செவிலியர்கள் பணியாற்றினர். அவர்களுக்கான தேவைகளை முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு நிச்சயம் செய்து கொடுக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X