பொது செய்தி

தமிழ்நாடு

'கை நீட்டும்' போலீசார் பணி மாறுதல் எப்போது?

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசார், 'ஓசி' சாப்பாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு, துணிந்து 'கைகளை நீட்டு'வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து என பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியக் கூடாது.அவ்வாறு பணிபுரியும் போலீசாருக்கு

காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசார், 'ஓசி' சாப்பாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு, துணிந்து 'கைகளை நீட்டு'வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



latest tamil news


தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து என பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியக் கூடாது.அவ்வாறு பணிபுரியும் போலீசாருக்கு வசூல் வேட்டைக்கான யுத்திகள் அனைத்தும் அத்துபடியாகும். மாதம், வாரம், தினமும் என எந்த இடங்களில் எவ்வளவு வசூல் கிடைக்கும் என்ற விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் இவர்களுக்கு அனுபவமும் அதிகம். இவர்கள் பணிபுரியும் இடங்களில் குற்றங்கள் நடந்தால், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து விடுவர். கூடா நட்பு காரணமாக, குற்றவாளிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விடும் போலீசாரும் உண்டு.

இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்களை உயர் அதிகாரிகள் மாற்றி விடுவர்.இப்படி பணி மாறுதல் செய்யப்படும் போது, புதிதாக வரும் நபர்கள், வசூலாகும் இடங்களை அடையாளம் காணவே ஓராண்டு ஆகிவிடும். புதிய நபர்கள் கை நீட்ட தயங்குவர்.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், 'எப்படியும் நம்மை அதிகாரிகள் மாற்றி விடுவர். அதனால் கிடைத்தது வரை லாபம்' என, துணிந்து கை நீட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில், போக்குவரத்து போலீசார் தான் முதல் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைநகர் சென்னையில், பூக்கடை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, புழல், செங்குன்றம் என வடக்கு போக்குவரத்து பிரிவில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோர் அதிகம் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


latest tamil news


இதனால், அந்த இடங்களுக்கு புதிய நபர்கள் வர முடியாத சூழல் உள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது:பணிமாறுதல் கோரி விண்ணப்பித்தால், காலி பணியிடம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் போலீசார் பணிபுரிந்தால் எப்படி காலி பணியிடம் ஏற்படும். இதனால், மாநிலம் முழுதும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், எஸ்.ஐ., உள்ளிட்டோரின் விபரங்களை சேகரித்து பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-செப்-202112:42:11 IST Report Abuse
Lion Drsekar "கூடா நட்பு காரணமாக, குற்றவாளிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விடும் போலீசாரும் உண்டு" பாராட்டுக்கள், இதே போன்று எல்லா அரசுத்துறைகளிலும் இருக்கிறது, இவர்கள் செய்வது தெரிந்து நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு , சம்பள உயர்வு , எல்லாம் கிடைத்துக்கொண்டும் இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-செப்-202112:07:15 IST Report Abuse
Ramesh Sargam ஒரு நாளுக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்று இவர்களை மாற்றினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். ஏனென்றால் 'கை நீட்டும்' அந்த பழக்கம் அவர்கள் மரபணுவிலேயே உள்ளது. நான் இந்த கருத்தை மிகவும் வேதனையுடன் பகிர்கிறேன். ஒட்டு மொத்தமாக நான் எல்லா போலீஸ் காரர்களையும் குறைகூறவில்லை. அதிலும் ஒரு சில மாணிக்கங்கள் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு சில மாணிக்கங்கள் மொத்தமாக அந்த பெரிய சகதியில் மறைந்துபோய் இருக்கிறார்கள். அவர்களை கண்டெடுத்து மற்றவர்களையும் நாம் மாணிக்கமாக மாற்ற முயலவேண்டும். முதலில் லஞ்சம் கொடுப்பவர்களை தண்டிக்க வேண்டும். பிறகு லஞ்சம் கேட்பவர்களை, லஞ்சம் வாங்குபவர்களை சரியாக தண்டிக்கவேண்டும்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-செப்-202111:55:15 IST Report Abuse
Narayanan இன்றுவரை ஸ்டாலின் அரசு லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் , அமைச்சர்கள் , எம் எல் ஏக்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று அறிக்கை இல்லை . இது லஞ்சத்தை ஊக்கப்படுத்தும் நிலையில்தான் இருக்கிறது . இந்த லஞ்சம் வாங்கும் போலீஸ்காரர்கள் எங்கே போனாலும் அவர்களுக்கு தெரியும் எப்படி எங்கே என்று . மாதம் தவறாமல் கப்பம் ஸ்டேஷனுக்கே வருகிறது . லஞ்சம் என்பது நீக்கமற நிறைந்துவிட்டது . இவற்றை பள்ளி படிப்பில் இறை பயம் சேர்க்க வேண்டும் . இப்படிசெய்தால் தவறு என்று மனதில் பதியவைக்க வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X