கை நீட்டும் போலீசார் பணி மாறுதல் எப்போது?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'கை நீட்டும்' போலீசார் பணி மாறுதல் எப்போது?

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசார், 'ஓசி' சாப்பாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு, துணிந்து 'கைகளை நீட்டு'வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து என பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியக் கூடாது.அவ்வாறு பணிபுரியும் போலீசாருக்கு

காவல் நிலையங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் போலீசார், 'ஓசி' சாப்பாடு உள்ளிட்ட விவகாரங்களுக்கு, துணிந்து 'கைகளை நீட்டு'வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



latest tamil news


தமிழக காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து என பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் போலீசார், மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியக் கூடாது.அவ்வாறு பணிபுரியும் போலீசாருக்கு வசூல் வேட்டைக்கான யுத்திகள் அனைத்தும் அத்துபடியாகும். மாதம், வாரம், தினமும் என எந்த இடங்களில் எவ்வளவு வசூல் கிடைக்கும் என்ற விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பர்.

மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிவதால் இவர்களுக்கு அனுபவமும் அதிகம். இவர்கள் பணிபுரியும் இடங்களில் குற்றங்கள் நடந்தால், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து விடுவர். கூடா நட்பு காரணமாக, குற்றவாளிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவித்து விடும் போலீசாரும் உண்டு.

இதுபோன்ற விஷயங்களை தவிர்ப்பதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்களை உயர் அதிகாரிகள் மாற்றி விடுவர்.இப்படி பணி மாறுதல் செய்யப்படும் போது, புதிதாக வரும் நபர்கள், வசூலாகும் இடங்களை அடையாளம் காணவே ஓராண்டு ஆகிவிடும். புதிய நபர்கள் கை நீட்ட தயங்குவர்.மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், 'எப்படியும் நம்மை அதிகாரிகள் மாற்றி விடுவர். அதனால் கிடைத்தது வரை லாபம்' என, துணிந்து கை நீட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதில், போக்குவரத்து போலீசார் தான் முதல் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. தலைநகர் சென்னையில், பூக்கடை, ராயபுரம், வண்ணாரப்பேட்டை, புழல், செங்குன்றம் என வடக்கு போக்குவரத்து பிரிவில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிவோர் அதிகம் இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.


latest tamil news


இதனால், அந்த இடங்களுக்கு புதிய நபர்கள் வர முடியாத சூழல் உள்ளது.இது குறித்து போலீசார் கூறியதாவது:பணிமாறுதல் கோரி விண்ணப்பித்தால், காலி பணியிடம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் போலீசார் பணிபுரிந்தால் எப்படி காலி பணியிடம் ஏற்படும். இதனால், மாநிலம் முழுதும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் போலீசார், எஸ்.ஐ., உள்ளிட்டோரின் விபரங்களை சேகரித்து பணியிட மாறுதல் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X