பொது செய்தி

இந்தியா

எமதண்டீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ பூஜை

Added : செப் 20, 2021
Share
Advertisement
மயிலம் : மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை நடந்தது.அதனையொட்டி, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் கிராம மக்கள்
எமதண்டீஸ்வரர் கோயிலில் சனி பிரதோஷ பூஜை

மயிலம் : மயிலம் அடுத்த ஆலகிராமத்தில் உள்ள எமதண்டீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ பூஜை நடந்தது.

அதனையொட்டி, மாலை 5:00 மணிக்கு மூலவருக்கு பால், சந்தனம் உள்ளிட்டவைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நந்திக்கு நடந்த மகா தீபாராதனை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை சுந்தரமூர்த்தி குருக்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர். இதே போன்று, மயிலம் சுந்தர விநாயகர் கோவில், பெரும்பாக்கம், நெடி, பாதிராப்புலியூர், தென்பசியார், கொல்லியங்குணம் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் சனி மகா பிரதோஷ சிறப்பு பூஜை நடந்தது.
திண்டிவனம்
திண்டிவனம் திந்திரிணீஸ்வரர் கோவிலில் மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திந்திரிணீஸ்வரர் சமேதராக நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.விழுப்புரம்விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் நந்தீஸ்வரருக்கு மாலை 4:00 மணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து நந்தி பகவான் ஆலய உட்பிரகார உலா நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X