பொது செய்தி

தமிழ்நாடு

பெற்றோருக்கு எதிராக நடிகர் விஜய் வழக்கு

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை--'நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால், கடந்தாண்டு ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார். பின், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய, அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முயற்சி செய்தார்.கட்சியின் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலராக சந்திரசேகர்,

சென்னை--'நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும்' என, அவரது ரசிகர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால், கடந்தாண்டு ரசிகர்களை சந்தித்து விஜய் ஆலோசனை நடத்தினார்.

பின், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியை பதிவு செய்ய, அவரது தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் முயற்சி செய்தார்.கட்சியின் தலைவராக உறவினர் பத்மநாபன், பொதுச் செயலராக சந்திரசேகர், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், தன் பெயரை பயன்படுத்தி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கூட்டங்கள் நடத்தவோ, வேறு செயல்களில் ஈடுபடவோ, தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை நகர ஐந்தாவது உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

நடிகர் சி.ஜோசப் விஜய் என்ற பெயரில் ஏப்ரலில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில், சங்கங்களின் பதிவாளர், துாத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஜெகன், முன்னாள் மக்கள் தொடர்பாளர் செல்வகுமார், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத் தலைவர் பத்மநாபன் உள்ளிட்ட 11 பேர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வழக்கு, நீதிபதி எல்.மகேஸ்வரி முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவுக்கு பதில் அளிக்குமாறு எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை 27ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran V - Chennai,இந்தியா
20-செப்-202119:17:50 IST Report Abuse
Ramachandran V இந்த மாதிரி நாடகம் நிறைய பார்த்தாச்சு. தேவ கவுடா = குமாரசுவாமி, முலாயம் யாதவ்-அகிலேஷ் யாதவ். நடிப்பது சினிமாவோடு இருக்கட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X