'தகுதியான மாணவர்களை ஒதுக்கி முறைகேடாக சேர்க்கை நடத்துவதா?' : டில்லி ஐகோர்ட்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி-'மருத்துவம் உட்பட அனைத்து கல்லுாரிகளிலும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களை ஒதுக்கிவிட்டு முறைகேடாக சேர்க்கை வழங்குவது சரியல்ல' என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாட்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த விதிகளை

புதுடில்லி-'மருத்துவம் உட்பட அனைத்து கல்லுாரிகளிலும் தகுதி அடிப்படையில் சேர்க்கைக்கு காத்திருக்கும் மாணவர்களை ஒதுக்கிவிட்டு முறைகேடாக சேர்க்கை வழங்குவது சரியல்ல' என டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



latest tamil news


நாட்டில் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த விதிகளை மீறி மத்திய பிரதேசத்தின் போபால் எல்.என்., மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 2016ல் ஐந்து மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.அவர்களை கல்லுாரியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் அனுப்பியது. ஆனால் கல்லுாரி தரப்பில் அவர்கள் தொடர்ந்து படிக்கவும், தேர்வுகள் எழுதி அடுத்தடுத்த நிலைகளுக்கு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதற்கிடையே மருத்துவ கவுன்சில் உத்தரவை ரத்து செய்வதுடன், தங்கள் மருத்துவக் கல்வியை தொடர அனுமதி கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனு டில்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆனது.இதையடுத்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

முடிவில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் தகுதி அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் சேர கடினமாக உழைக்கின்றனர்; அப்படி இருக்கும்போது மருத்துவக் கல்லுாரி உட்பட எந்த கல்வி நிறுவனத்திலும் முறைகேடான சேர்க்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.கல்வி நிலையங்களில் குறுக்கு வழியில் சிலருக்கு வழங்கப்படும் அனுமதியால், அதிக தகுதி பெற்றவர்கள் கல்லுாரிகளில் சேர்க்கை கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது.


latest tamil news


இந்த விவகாரத்தில் நான்கு கல்வி ஆண்டுகள் வீணானதாக மனுதாரர்கள் கூறுகின்றனர்; இதற்கு அவர்களே முழு பொறுப்பும் ஏற்க வேண்டும்.இந்திய மருத்துவ கவுன்சில் கடிதம் கிடைத்ததும், அவர்கள் கல்லுாரியில் இருந்து வெளியேறி இருந்தால் நான்கு ஆண்டுகள் வீணாகி இருக்காது.

ஏற்கனவே அவர்கள் தாக்கல் செய்த மனுவிற்கு ஏதேனும் இடைக்கால உத்தரவு கிடைத்திருந்தால் ஐந்து பேரும் கல்வியை தொடர்ந்ததில் அர்த்தம் இருந்திருக்கும்.அதுபோல் எந்த அனுமதியும் கிடைக்காமல், அவர்கள் எடுத்த முடிவுகள் தற்போது அவர்களுக்கே எதிராக முடிந்துள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வால்டர் - Chennai,இந்தியா
20-செப்-202117:19:36 IST Report Abuse
வால்டர் மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடை பெறுகிறது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
20-செப்-202116:56:07 IST Report Abuse
vbs manian தமிழகம் இதை பார்க்குமா.
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
20-செப்-202116:29:07 IST Report Abuse
Rengaraj சரியான தீர்ப்பு உயர்கல்வி மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு இது முன்மாதிரியாக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கல்வியின் தரம் உயர வேண்டும் என்றால் மாணவ மாணவியருக்கிடையே கடும் போட்டி இருக்குமாறு ஒரே பாடத்திட்டம் வேண்டும். ஒரே அமைப்பின் கீழ் தேர்வு நடக்க வேண்டும். நம் நாடு என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டுமே ஒழியே நம் மாநிலம் என்று பார்க்க கூடாது. படிக்கும் மாணவர்கள் எல்லோரும் எப்போதும் நம் மாநிலத்திலேயே இருக்கப்போவதில்லை. தொழில் , மேல்படிப்பு , ஆராய்ச்சி என்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் படிக்கவோ , வேலை செய்யவோ தேவை இருக்கும். அந்த அந்த துறை சார்ந்த படிப்புகளில்மேன்மையான அறிவும் திறமையும் கொண்டவர்களால் மட்டுமே அந்த துறையை காலத்துக்கு ஏற்றவாறு உலகத்தரத்துக்கான அளவில் மேம்படுத்த முடியும். அது நீண்ட கால அளவில் ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் பயனளிக்கும். தொலைநோக்கு பார்வையோடு உயர் கல்வியை அணுக வேண்டும். வோட்டுவங்கிக்காக மட்டுமே மாணவர்களை ஏமாற்றக்கூடாது. அது சமுதாயத்தை புரட்டிப்போட்டு விடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X