பொது செய்தி

தமிழ்நாடு

8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க அதிகாரிகள் இன்று ஆலோசனை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை : எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனை இன்று நடக்கிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இம்மாதம்

சென்னை : எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவது குறித்து, உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான ஆலோசனை இன்று நடக்கிறது.



latest tamil news


தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வகுப்புகள் மட்டுமே நடக்கின்றன. ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இம்மாதம் 1ம் தேதி முதல், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறந்து பாடம் நடத்தாவிட்டால் உளவியல் ரீதியாக பாதிக்கப்படுவர் என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

ஐ.சி.எம்.ஆர்., மற்றும் உலக சுகாதார நிறுவனமும், தொடக்க பள்ளிகளில் வகுப்புகளை துவங்க வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.இதன்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரசு பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்துவதில் உள்ள சிரமங்கள் குறித்து, ஆசிரியர்களிடம் பெறப்பட்ட கருத்துகள், முதல்வரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பள்ளிகளை திறப்பது குறித்து, மருத்துவத் துறை, பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறை உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடக்க உள்ளது.


latest tamil news


இதன்பின், பள்ளிகள் திறப்பு முடிவை முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரும்பினால் வரலாம்!எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, பள்ளிகளில் நேரடி வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் தயாராக உள்ளன. அதே நேரம், அரசு பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்த கல்வி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.இந்நிலையில், பெற்றோர் விரும்பினால் மட்டும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்ற நிபந்தனையுடன், தனியார் மற்றும் அரசு பள்ளிகளை திறக்கலாம் என, பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆலோசனை வழங்கி உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தத்வமசி - சென்னை ,இந்தியா
20-செப்-202113:41:28 IST Report Abuse
தத்வமசி பள்ளிகளை திறக்க வேண்டாம் என்று கருத்து கூறுவார்கள். சென்றால் பீஸ் கட்ட வேண்டும். புத்தகம் வாங்க வேண்டும், எழுத வேண்டும், படிக்க வேண்டும். அரசு தான் தாராளமாக ஆல் பாஸ் முறை வைத்துள்ளது. பணம் கிடையாது என்று புலம்புவார்கள். முதல் நாள் முதல் உட்கார வைத்து முழு சம்பளம், சம்பள உயர்வு என்று கொடுத்துக் கொண்டிருந்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கொரோனாவை காரணம் காட்டி போராட்டம் கூட செய்யலாம். அரசுக்கு என்ன நஷ்டம் ? ஓட்டு வங்கியாக மாறிப்போய் விட்டனர் இவர்கள். அதற்கு இந்த அரசின் ஜால்ரா ஆசிரியர் யூனியன் கொடியும் பிடிக்கலாம். இன்னும் மருத்துவ படிப்புக்குத் தான் ஆல் பாஸ் வரவில்லை. அதற்கும் விடியல் அரசு என்ன செய்யுமோ ? மாறாக பொழுது போகவில்லை என்று பிள்ளைகளை கூட்டிக்கொண்டு சினிமா தியேட்டர் செல்லலாம், சுற்றுலா செல்லலாம், திருமணம் போன்ற நிகழ்சிக்களுக்கு செல்லலாம். வழிபாட்டு தளங்களுக்கு குடும்பத்துடன் செல்லலாம். ஏற்காடு, ஊட்டி, கொடைகனால், ஷாப்பிங் மால் என்று சுற்றி வரலாம். இதற்கு பணம் எங்கிருந்து தான் வருமோ ? கொரோனா வராது. பள்ளி திறந்துவிட்டால் கொரோனா வரும். அப்படித்தான் கொரோனா வைரஸ் எல்ல்லோரிடமும் கூறி உள்ளது.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
20-செப்-202107:32:48 IST Report Abuse
duruvasar அப்போ இந்த ஆண்டு ஆல்பாஸ் கிடையாதா ? வீட்டிலிருந்து பாடம் சொல்லிக் கொடுக்க நிறைய ஆசிர்யகளை ஈர்க்கும் வகையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் தவிர, தினசரி பேட்டா கொடுத்து ஊக்குவிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X