பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் 16.43 லட்சம் பேருக்கு தடுப்பூசி தமிழகத்தில் 2வது முறையாக சாதனை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : தமிழகத்தில் இரண்டாவது முறையாக நேற்று நடந்த, 'மெகா தடுப்பூசி' முகாமில், 16.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.முகாமை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரே நாளில், 15 லட்சம் என்ற இலக்கை தாண்டி, தடுப்பூசி போடுவதில் அரசு சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, 18
16.43 lakhs vaccine, 2nd time, TN Achieved, 2வது முறையாக சாதனை, 16.43 லட்சம் தடுப்பூசி,

சென்னை : தமிழகத்தில் இரண்டாவது முறையாக நேற்று நடந்த, 'மெகா தடுப்பூசி' முகாமில், 16.43 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

முகாமை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். ஒரே நாளில், 15 லட்சம் என்ற இலக்கை தாண்டி, தடுப்பூசி போடுவதில் அரசு சாதனை படைத்துள்ளது.தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.கடந்த 12ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுதல் என்ற இலக்கை தாண்டி, 28.91 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

சாதனை

இதைத் தொடர்ந்து, நேற்று இரண்டாவது முறையாக, தமிழகம் முழுதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. அரசிடம், 17 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்ததால், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனாலும், முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இரண்டாவது முறையாக, இலக்கை தாண்டி தடுப்பூசி போடுவதில் தமிழக அரசு சாதனை படைத்து உள்ளது. சென்னையில் உள்ள 200 வார்டுகளில், 1,600 தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சைதாப்பேட்டை மற்றும் ஈக்காட்டுதாங்கல் தடுப்பூசி முகாம்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்; அங்கு தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தவர்களை பாராட்டி, அவர்களுடன் உரையாடினார். சென்னையின் பல்வேறு இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை, மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

இதையடுத்து, நேற்று மாலை சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில் அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும், 4.35 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதில் 4.12 கோடி தடுப்பூசிகளை அரசே செலுத்தி உள்ளது. இரண்டாம் கட்ட மெகா தொடர்ச்சி 3ம் பக்கம்ஒரே நாளில்...முதல் பக்கத் தொடர்ச்சிதடுப்பூசி முகாமிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால், கையிருப்பு தடுப்பூசி தீர்ந்திருக்கும்.தடுப்பூசி போட்டுக் கொள்ளாதோர் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே, தடுப்பூசிகளை உடனே அதிகம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்.


latest tamil news


அடுத்த மாதத்திற்குள், முதல் தவணை தடுப்பூசியை அனைவருக்கும் போட்டு விட வேண்டும் என இலக்குடன் செயல்பட்டு வருகிறோம்.மழைக்காலம் என்பதால், அக்டோபர் வரை கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த, மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருவோர், தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றுடன் வந்தாலும், அவர்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
20-செப்-202113:59:30 IST Report Abuse
vpurushothaman " மா சு ' கலக்கறார் சார். சேகர் பாபு பின்னுக்குப் போய் விட்டார்.
Rate this:
Cancel
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
20-செப்-202112:16:04 IST Report Abuse
Sundaresan Palamadai Krishnan சென்ற வாரம் ஞாயிறு அன்று போட்டதாக சொல்லப்பட்ட 28.6 லட்சம் தடுப்பூசிகளுக்கு மத்திய அரசின் இணைய தளத்தில் எண்ணிக்கை இது வரை match ஆகவில்லை. இன்றும் அதே நிலைமைதான்.
Rate this:
Cancel
Sundaresan Palamadai Krishnan - Chennai,இந்தியா
20-செப்-202112:01:10 IST Report Abuse
Sundaresan Palamadai Krishnan se
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X