பொது செய்தி

இந்தியா

'ட்ரோன்'களை சுட்டு வீழ்த்த பாதுகாப்புப் படைக்கு அறிவுரை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி : உரிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை, ரப்பர் புல்லட்டால் 'ட்ரோன்'களை சுட்டு வீழ்த்தும்படி பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமீப காலமாக நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.ஜம்மு -
border drone, shoot drone, jammu kashmir drone, ட்ரோன், துப்பாக்கி, சுட்டுத்தள்ள உத்தரவு,

புதுடில்லி : உரிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை, ரப்பர் புல்லட்டால் 'ட்ரோன்'களை சுட்டு வீழ்த்தும்படி பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சமீப காலமாக நம் அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து ஜம்மு - காஷ்மீர் எல்லைக்குள், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் அத்துமீறி நுழையும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.ஜம்மு - காஷ்மீரில் உள்ள விமானப் படை தளத்தில், சமீபத்தில், ட்ரோன் வாயிலாக நடத்தப்பட்ட தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.


latest tamil news


இந்நிலையில் முக்கிய கட்டுமானங்கள், விமான நிலையங்கள் மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகே, ட்ரோன்கள் பறந்து வந்தால், அவற்றை ரப்பர் புல்லட்டால் சுட்டு தகர்க்க, பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ட்ரோன் தாக்குதலை எதிர்கொள்ள, உரிய தொழில்நுட்ப சாதனம் கண்டுபிடிக்கப்படும் வரை, இந்த துப்பாக்கியை பயன்படுத்த பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கியால் நிலத்தில் இருந்து 60 - 100 மீட்டர் உயரத்தில் பறக்கும் ட்ரோன்களை சுட்டு வீழ்த்த முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
20-செப்-202118:46:28 IST Report Abuse
DVRR இதுக்கு இவ்வளவு நாள்????????தவறு கண்டேன் சுட்டேன் என்ற சட்டம் ஒன்றே சரியானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X