பொது செய்தி

இந்தியா

குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞரிடம் இருந்த பையை பறித்து, மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.உ.பி., மாநிலம் ராம்பூர் மாவட்டம், ஷாகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் சர்மா; வழக்கறிஞர். இவர், முத்திரை தாள்கள் வாங்குவதற்காக ஒரு பையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கருவூல அலுவலகத்துக்கு நடந்து
Monkey Heist, Rainy Cash, UP, Skies, Cash, Uttar Pradesh, உபி, குரங்கு, பணம், பண மழை, உத்தர பிரதேசம்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் வழக்கறிஞரிடம் இருந்த பையை பறித்து, மரத்தின் மீது ஏறிய குரங்கு, பையிலிருந்த பணத்தை மக்கள் மீது மழையாக பொழிந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

உ.பி., மாநிலம் ராம்பூர் மாவட்டம், ஷாகாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வினோத் குமார் சர்மா; வழக்கறிஞர். இவர், முத்திரை தாள்கள் வாங்குவதற்காக ஒரு பையில் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் கருவூல அலுவலகத்துக்கு நடந்து சென்றார். அங்கு வந்த ஒரு குரங்கு, வினோத் குமாரிடம் இருந்த பணப் பையை பறித்துக் கொண்டு ஓடியது. அதிர்ச்சி அடைந்த வினோத் குமார் குரங்கை துரத்தினார். அருகிலிருந்த மரத்தில் குரங்கு வேகமாக ஏறியது.


latest tamil news


குரங்கை வினோத் குமார் துரத்திச் சென்றதை பார்த்தவர்கள் மரத்தடியில் கூடினர். பையை திறந்த குரங்கு, அதிலிருந்த இரண்டு பணக் கட்டுகளை எடுத்துக் கொண்டு பையை மட்டும் கீழே போட்டது. பையை வினோத் குமார் எடுத்து பார்த்த போது அதில் ௧ லட்சம் ரூபாய் மட்டுமே இருந்தது. இதற்கிடையில், இரண்டு பணக் கட்டுகளை எடுத்த குரங்கு, அதை பிரித்து மரத்தில் தாவி குதித்தபடி கீழே விசிறியடித்தது.


latest tamil news


மரத்தடியில் இருந்தவர்கள் பணத்தை எடுத்து வினோத் குமாரிடம் கொடுத்தனர். எனினும் 95 ஆயிரம் ரூபாய் மட்டுமே வினோத் குமாருக்கு கிடைத்தது. பணத்தை எடுத்த சிலர், அதை வினோத் குமாரிடம் கொடுக்காமல் சென்றுவிட்டது தெரிந்தது. எனினும், 'இந்த அளவாவது திரும்பக் கிடைத்ததே' என்ற மகிழ்ச்சியில் அங்கிருந்த மக்களுக்கு வினோத் குமார் நன்றி கூறினார். பணத்தை குரங்கு வீசியதையும், அதை மக்கள் பொறுக்கி எடுத்ததையும் 'வீடியோ' எடுத்த சிலர், அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
20-செப்-202118:42:40 IST Report Abuse
DVRR சிறிய சந்தேகம் . இவர், முத்திரை தாள்கள் வாங்குவதற்காக ஒரு பையில் 2 லட்சம் ரூபாய்???1) Stamp Paper of Rs. 10 used for Affidavit, Declaration, Undertaking etc. 2) Stamp Paper of Rs. 20 for Special Power of Attorney. 3) Stamp Paper of Rs. 50 for General Power of Attorney/Agreement. 4) Stamp Paper of Rs. 100 for Indemnity Bond, Guarantee Bond. அப்போ எவ்வளவு முத்திரை தாள்கள் வாங்க ஒரு 20,000???10,000??4,000???2,000. 500, A4 பேப்பர் 4 Bundle வாங்கிக்கொண்டு போகவே ஒரு ஆளுக்கு மூச்சு முட்டும் இவர் 40 பண்டில் வாங்கிக்கொண்டு போக வந்தாராம்????இது கறுப்புப்பணம் தான்
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
20-செப்-202117:07:51 IST Report Abuse
Vena Suna ஹஹஹ என்று சிரிக்க முடியவில்லை.பாவம் மனுஷன்.
Rate this:
Cancel
20-செப்-202114:52:37 IST Report Abuse
ஸாயிப்ரியா அது எப்படி வக்கீல் பணம் என்று அறிந்து கொண்டாய் வானரமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X