காபூலில் தாக்குதல் நடத்தியவர் இந்தியாவில் தங்கியிருந்ததாக தகவல்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.தற்கொலைப்படைதெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டை விட்டு
Kabul Bomber, Deported, India, 5 yrs ago, IS Links, காபூல், தற்கொலைப்படை, தாக்குதல், இந்தியா

புதுடில்லி: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர், இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இந்தியாவில் இருந்து ஐந்து ஆண்டுக்கு முன் நாடு கடத்தப்பட்டவர் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


தற்கொலைப்படை


தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை தலிபான்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அப்போது ஆயிரக்கணக்கான மக்கள், நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் திரண்டனர். ஆக.,27ல் காபூல் விமான நிலைய வாயிலில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 183 பேர் கொல்லப்பட்டனர்.


latest tamil news


இந்நிலையில் இந்த தாக்குதலை நடத்தியவர் குறித்து ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய, 'சவாத் அல் ஹிந்த்' என்ற பத்திரிகையில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர் அப்துர் ரஹ்மான அலோக்ரி. காஷ்மீர் விவகாரத்தில் பழிவாங்கும் வகையில் பசுக்களை வழிபடும் ஹிந்துக்களை கொல்வதற்காக அலோக்ரி இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார்.


நாடு கடத்தப்பட்டார்


அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட இடம், புதுடில்லி. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக இந்தியாவில் கைது செய்யப்பட்டு, ஆப்கானிஸ்தானுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் நாடு கடத்தப்பட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து நம் பாதுகாப்பு அமைப்புகள் ஏதும் கருத்து தெரிவிக்கவில்லை.


latest tamil news



இன்ஜினியரிங்


கடந்த 2018ல் நம் நாட்டில் வெளியான செய்திகளில் 'டில்லியை அடுத்துள்ள பரிதாபாத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் அலோக்ரி படித்து வந்தார். ஐ.எஸ்., அமைப்புக்கு ஆதரவாக இவர் செயல்படுவதாக தகவல்கள் கிடைத்தன. 'இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டு, அமெரிக்க படைகளிடம் ஒப்படைக்கப்பட்டார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
20-செப்-202118:46:51 IST Report Abuse
Anand CAA வை எதிர்த்து போராடினவங்களையும், தீர்மானம் போட்டவனுங்களையும் நாட்டை விட்டு துரத்தவேண்டும்...
Rate this:
Cancel
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
20-செப்-202118:12:31 IST Report Abuse
Rasheel மூர்கனின் ரத்தத்தில் ஊறிய குணம். குண்டு வைத்து குதூகலிக்கறான்.
Rate this:
Cancel
Chandradas Appavoo - Kuzhithurai,இந்தியா
20-செப்-202117:48:09 IST Report Abuse
Chandradas Appavoo சங்கிகள் எங்கே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X