எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்....

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பர். தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற, தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்.- தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி'எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள். எனவே, இனிமேலும் வேண்டாமே இந்த
எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள்....

லோக்சபாவிலும், ராஜ்யசபாவிலும், தி.மு.க., கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.,க்கள், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பர். தமிழகத்திற்கு, 'நீட்' தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெற, தமிழக அரசு மேற்கொள்ளும் முயற்சிகள் நிச்சயம் வெற்றி பெறும்.
- தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி


'எத்தனை நாளைக்குத் தான் இதையே சொல்லி, தமிழக மக்களை ஏமாற்றுவீர்கள். எனவே, இனிமேலும் வேண்டாமே இந்த சால்ஜாப்பு...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை.



தமிழகத்தில் சுங்கச் சாவடிகளில் வசூல் காலம் முடிந்த பிறகும் தொடர்ந்து கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றனர். விதி மீறி சுங்கச் சாவடிகள் அமைத்து உள்ளனர். அனைத்து சுங்கச் சாவடிகளையும் அகற்ற வேண்டும்.
- தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன்


'தி.மு.க., கூட்டணியின் தலைவர்களில் ஒருவராக ஆகி விட்டீர்கள். 'சுங்கச்சாவடி புகழ்' வேல்முருகன் என்ற பெயரை தக்க வைக்க இன்னும் முயலாதீர்கள்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், தமிழக வாழ்வுரிமை கட்சி என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை.



அ.தி.மு.க.,வுடன் கூட்டணியில் உள்ளோம். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து கலந்து பேசி முடிவு செய்வோம்.
- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன்


'நல்லவேளை கமல் கட்சி, பா.ம.க., மற்றும் சீமான் கட்சி போல தனித்து போட்டி என்ற முடிவை எடுக்காமல் இருந்தீர்களே...' என பாராட்டத் தோன்றும் வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் பேட்டி.



பிரதமர் மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ஆட்சியில் இருக்கும் வரை பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை குறைவதற்கான வாய்ப்பு இல்லை. விலை உயர்வுக்கு மத்திய அரசின் வரி தான் காரணம்.
- தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம்


latest tamil news




'வருமானத்திற்கு வேறு வழியை சொன்னால், பெட்ரோல், காஸ் விலை வரியை மத்திய அரசு கைவிட்டு விடும். உங்கள் அப்பா காலத்தில் துவங்கிய பழக்கம் தானே இது...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி.



'மற்ற போட்டித் தேர்வுகளுக்கு எப்படி தயார் செய்கிறீர்களோ, அதே நடைமுறையில் உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என்று மாணவர்களுக்கு அரசு அறிவுரை வழங்கியிருக்க வேண்டும். அதை தவிர்த்து, 'நீட் தேர்வை ரத்து செய்வோம்; சட்டசபையில் தீர்மானம் கொண்டு வருவோம்' என்று கட்டுக் கதைகளை கூறி, மாணவர்கள் மத்தியில் பொய்யான ஒரு மாயை ஏற்படுத்தக் கூடாது.
- பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர்


'நீட் விவகாரத்தில் ஆலோசனைகளுக்கு இடமளிக்காத அரசு தமிழகத்தில் உள்ளதால் உங்கள் அறிவுரை வீண் தான்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேட்டி.



'நீட்' தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி, அவர்களது குடும்பத்தை ஆற்றுப்படுத்துவதற்காக வழங்கப்படும் கொடை. அதை விடுத்து ஊக்கப்படுத்துவதாக நினைத்துக் கொள்ளக் கூடாது.
- விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன்


'நீங்கள் மற்றும் கூட்டணி கட்சிகள் வழங்கும் நிதி, தற்கொலைகளை ஊக்கப்படுத்தத் தானோ என்ற சந்தேகம் நீண்ட காலமாக உள்ளது...' என, கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி.

Advertisement


வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
24-செப்-202122:07:50 IST Report Abuse
madhavan rajan ஆற்றுப்படுத்துவதற்காக என்று கூறினால் அந்த காட்சிகள் எல்லா தற்கொலைகளுக்கு வழங்க வேண்டும். எதற்காக நீட் தற்கொலைகளுக்கு மட்டும் வழங்குகிறீர்கள். காங்கிரஸ் மற்றும் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்தபோது கொண்டு வந்த நீட் தேர்வு சட்டத்திற்கு திமுக தற்கொலை நிதி அளித்தால் அந்த கட்சிகள் தவறு செய்துவிட்டு பரிகாரம் தேடுவதாக பொருள். அதைத்தான் செய்கிறார்களா?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
24-செப்-202121:47:42 IST Report Abuse
madhavan rajan நீட் தெருவிலிருந்து தமிழகம் விலக்கு பெற்றால் அதை மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசின் தவறான முடிவால் கொண்டுவரப்பட்டது என்பதை காங்கிரஸ் மாநிலத்தலைவர் ஏற்றுக்கொள்வாரா?
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:36:49 IST Report Abuse
jayvee தம்பி கார்த்தி.. உங்கப்பா காலத்துல ஆயில் போடுன்னு பல லட்சம் கோடி எண்ணெய் நிறுவங்களுக்கு பட்டை சாத்திவிட்டு போனாரு.. அது தெரியுமா? காரோண காலதில் வருவாய் இல்லாமல், மத்திய அரசு பல லட்சம் கோடிக்கணக்கான ரூபாய்களை மாநிலங்களுக்கும் காரோண கால செயல்பாடுகளுக்கும் செலவு செய்துள்ளது.. இதை ஈடுகட்ட எதாவது வழி இருந்தால் உங்கப்பாவிடம் கேட்டு சொல்லு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X