ஸ்பெயினில் வெடித்துச் சிதறும் எரிமலை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தன் கோர முகத்தை காட்டி வருவதால் சுற்று வட்டார பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தங்கள் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகின்றனர்.கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாவா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த
ஸ்பெயின், எரிமலை, மக்கள் வெளியேற்றம்

பார்சிலோனா: ஸ்பெயின் நாட்டில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறி தன் கோர முகத்தை காட்டி வருவதால் சுற்று வட்டார பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தங்கள் அத்தியாவசிய பொருட்களை எடுத்துக் கொண்டு வெளியேறி வருகின்றனர்.

கேனரி தீவு பகுதியிலுள்ள எரிமலை, திடீரென வெடித்துச் சிதறி லாவா குழம்பை வெளியேற்றி வருகிறது. இதனால் மலையடிவாரத்திலுள்ள 4 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் வளர்ப்பு விலங்குகளை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


latest tamil news


எரிமலை வெடித்துச் சிதறுவதால் 10 ஆயிரம் பேர் வரை மீட்கப்பட வேண்டியிருப்பதாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் எரிமலைக் குழம்பு அருகே பொதுமக்கள் செல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளனர். சாம்பல் புகை வெளியேறி வருவதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என ஸ்பெயின் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எரிமலை வெடித்துச் சிதறுவதால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால், ஐ.நா., பொதுச்சபை கூட்டத்திற்கு செல்வதற்கான பயணத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் தள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-செப்-202118:18:58 IST Report Abuse
elakkumanan எங்க ஊரில் முக்கியமான மீட்டிங் என்றால், வேறு சொந்த வேலைக்கு போய்டுவாங்க எங்க அமைச்சருங்க....டுமீல் பட்டி மக்களும் அவங்களுக்கு ஒட்டு விற்று நன்றி செலுத்துவார்கள்............அப்போரமா, எல்லாரும் கருப்பு பலூன் விட்டு மகிழ்வோம்.............இது எங்க இன வயக்கம் ...................இது ஒரு கழக பண்பாடு...சிலை வைப்பாங்க.... குழந்தைகள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க...........வாழும் வரலாறு ............நிறைய கடன் இருந்தால், நிறைய சிலை வைக்கணும்..இது ஒரு புதிய பொருளாதார கொள்கை.............
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-செப்-202110:57:21 IST Report Abuse
S.Baliah Seer அரசியல்வாதிகள் அல்லது மக்களை ஆளுபவர்கள் தொடர்ந்து மக்களை முட்டாளாக்கி வந்தால் இப்படி எரிமலையாக மக்கள் ஒருநாள் வெடிப்ப்பார்கள் என்பதைத்தான் இயற்கை நமக்கு அறிவுறுத்துகிறது.
Rate this:
விசு பாய் , சென்னைதமிழ்நாட்டில் எப்போது மக்கள் வெடிப்பார்கள்?...
Rate this:
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-தமிழகம்,இந்தியா
20-செப்-202117:50:41 IST Report Abuse
தமிழ்வேள்ஓசி பிரியாணி ,கோட்டர் சாராயம் மற்றும் சினிமா .,டிவி சீரியல்கள் நிறுத்தப்படும்போது .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X