அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., - காங்., கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்; உதயநிதி, கனிமொழி, திருமாவளவன் பங்கேற்பு

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (100)
Share
Advertisement
சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று (செப்.,20) முதல் எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தின.கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20ம் தேதி முதல் 10
Black Flag, DMK, Protest, Against, Centre, BJP, கருப்புக்கொடி, ஆர்ப்பாட்டம், மத்திய அரசு, திமுக

சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு தழுவிய அளவில் இன்று (செப்.,20) முதல் எதிர்க்கட்சிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தின.

கடந்த மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில், மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து செப்டம்பர் 20ம் தேதி முதல் 10 நாட்களுக்கு போராட்டம் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தன. அதன்படி, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணிக்கட்சிகள் இன்று கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டன.


latest tamil news



சென்னையில் திமுக எம்.பி., கனிமொழி, எம்எல்ஏ., உதயநிதி, ஆ.ராசா தலைமையில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக எம்பி., கதிர் ஆனந்த் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதேபோல், ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியினரும், சென்னை அசோக் நகரில் திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வீட்டின் முன் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.



போராட்டம் தொடரும்: உதயநிதி


ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து உதயநிதி பேசியதாவது:
நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோதும் போராடி கொண்டுதான் இருந்தோம். இன்று ஆளும் கட்சியாக இருந்தாலும் போராடிக் கொண்டுதான் இருக்கிறோம். காரணம், எங்கள் போராட்டம் மக்களுக்கானது. வேளாண் சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு தந்துள்ளோம்.
தற்போது, நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை மத்திய அரசு தொடர்சியாக செய்து வருகிறது. உடனடியாக இதை மத்திய அரசு கைவிட வேண்டும். மத்திய பா.ஜ., பாசிச ஆட்சியை எதிர்த்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை எங்கள் ஆர்ப்பாட்டம் முடிவுறாது. அது மேலும் மேலும் தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
22-செப்-202121:56:24 IST Report Abuse
madhavan rajan சென்ற ஆட்சியில் டாஸ்மாக் திறந்ததுக்கும் இவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இவர்கள் போராட்டத்தில் எவ்வளவு உண்மை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-செப்-202114:15:45 IST Report Abuse
Vena Suna தமிழ்நாடு பேரழிவிற்கு இவர்களால் செல்லும்.
Rate this:
Cancel
20-செப்-202122:16:17 IST Report Abuse
 kulandai kannan பத்து வருட பழக்க தோஷம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X