பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., பதவி அ.தி.மு.க., தீவிரம்: பா.ஜ., மல்லுக்கட்டு

Added : செப் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெற ஆளும் என்.ஆர்.காங்கிரஸிடம் பா.ஜ., கோரியுள்ளது. இந்நிலையில் தற்போது இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.,வும் இப்பதவியைத் தரக் கோரியுள்ளதால் முதல்வர் ரங்கசாமி தர்மசங்கடத்தில் சிக்கித் தவிக்கிறார்.புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க.,
Puducherry, RajyaSabha, MP, Seat, ADMK, BJP, NRCongress, Competition, புதுச்சேரி, எம்பி, பதவி, அதிமுக, பாஜ, தீவிரம்

புதுச்சேரி: புதுச்சேரியில் ராஜ்யசபா எம்.பி பதவியைப் பெற ஆளும் என்.ஆர்.காங்கிரஸிடம் பா.ஜ., கோரியுள்ளது. இந்நிலையில் தற்போது இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க.,வும் இப்பதவியைத் தரக் கோரியுள்ளதால் முதல்வர் ரங்கசாமி தர்மசங்கடத்தில் சிக்கித் தவிக்கிறார்.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான ரங்கசாமியிடம் புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் அளித்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க., என்.ஆர்.காங்., பா.ஜ., கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்டோம். 4 எம்எல்ஏ.,களோடு, சுமார் 18 சதவீத வாக்கு தகுதியில் இருந்த அ.தி.மு.க.,விற்கு குறைந்த இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையிலும், பல்வேறு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நம் கூட்டணியை அ.தி.மு.க., உறுதி செய்தது. தாங்கள் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு நியமனம் செய்யப்பட்ட 3 நியமன எம்எல்ஏ.,க்களில் அ.தி.மு.க.,விற்கு இடம் அளிக்கவில்லை.


latest tamil news



கூட்டணி வெற்றி பெற்று, ஆட்சியில் அமர்ந்துள்ள சூழ்நிலையில், புதுச்சேரி ராஜ்யசபா எம்.பி., நம் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் தகுதியை நாம் பெற்றுள்ளோம். தற்போது புதுச்சேரியில் அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி.,யாக இருந்த கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் முடிவடைந்து, அப்பதவிக்குத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

சட்டசபையில் அ.தி.மு.க.,விற்கு பிரதிநிதித்துவம் இல்லாத சூழ்நிலையில் ஏற்கெனவே அ.தி.மு.க., சார்பில் இருந்த ராஜ்யசபா எம்.பி., பதவியைக் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அ.தி.மு.க.,விற்கு வழங்க தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும். இது சம்பந்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும், முதல்வருமான நீங்கள், என்.ஆர்.காங்., பா.ஜ., அ.தி.மு.க., ஆகிய கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்காக, கலந்தாலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அ.தி.மு.க.,விற்கு ராஜ்யசபா எம்.பி. பதவியை வழங்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RandharGuy - Kolkatta,இந்தியா
20-செப்-202122:16:13 IST Report Abuse
RandharGuy அப்பிடி போடுங்க அருவாளை .....ஓட ஓட விரட்டி அடிங்க .....அந்த ரெட்டை யர்களை ....இது தான் திராவிடம் ஓடுங்கடா ம பி உ பி க்கு அக்கா தமிழிசை இருக்கறவரைக்கும் கவலை இல்லையே
Rate this:
Cancel
20-செப்-202115:08:08 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren 0............
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-செப்-202113:04:50 IST Report Abuse
பாமரன் ஒண்ட வந்த பிடாரிக்கு (ரெயிட் பயத்தில்) வீட்டை குடுத்துட்டு இப்போ தின்னையிலாவது கொஞ்சம் சாஞ்சுக்க இடத்தை குடுங்கன்னு கெஞ்சற லெவலுக்கு ஆயிடீம்கா வந்தது பரிதாபம்தான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X