பஞ்சாப் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்பு

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (13+ 14)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக, சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வந்தது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், சில எம்.எல்.ஏ.,க்கள்
Punjab CM, Charanjit Singh Channi, Takes Oath, Raj Bhawan, Congress,  Governor, Banwarilal Purohit, பஞ்சாப், முதல்வர், சரண்ஜித் சிங் சன்னி, பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப் மாநில புதிய முதல்வராக, சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் பஞ்சாபில் கடந்த சில மாதங்களாக உட்கட்சி மோதல் நீடித்து வந்தது. முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்கிற்கும், மாநில காங்கிரஸ் தலைவருமான சித்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மேலும், சில எம்.எல்.ஏ.,க்கள் அமரீந்தர் சிங்கை மாற்ற வேண்டும் என போர்க்கொடி தூக்கினர். இதனால், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கூட்டம் துவங்கும் சில மணி நேரத்திற்கு முன்னர் முதல்வர் அமரீந்தர் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தார்.


latest tamil news



இதனிடையே, நேற்று (செப்.,19) மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி ஒரு மனதாக தேர்வு செய்யப்படுவதாக, காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ஹாரீஸ் ராவத் தெரிவித்தார். அமரீந்தர் சிங் அரசில் சரண்ஜித் சிங் சன்னி, தொழில்நுட்பக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.


latest tamil news



இன்று (செப்.,20) சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலீத் முதல்வர் என்னும் சிறப்பை சரண்ஜித் சிங் சன்னி பெற்றார். காங்., மூத்த தலைவர்கள் ஓ.பி.சோனி, சுக்ஜிந்தர் எஸ் ரந்தவா உள்ளிட்டோர் துணை முதல்வர்களாக பொறுப்பேற்றனர். இந்நிகழ்ச்சியில் மாநில காங்., தலைவர் சித்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
20-செப்-202123:20:32 IST Report Abuse
Vena Suna நான் பயந்து போய்ட்டேன்
Rate this:
Cancel
chandran - madurai,இந்தியா
20-செப்-202119:34:51 IST Report Abuse
chandran அட பாவிங்களா. sikh மதத்திலும் ஜாதி இருக்குதா? sikh மதத்தில் ஜாதி இல்லை என்று நினைத்து கொண்டிருந்தேன்.. :-( :-(
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-செப்-202119:06:39 IST Report Abuse
DVRR சரண்ஜித் சிங் சன்னி மிகவும் பெரிய புரட்சித்தலைவர். 1) ஒரு பெண் ஐ ஏ எஸ் பாலியல் தொல்லை கொடுத்தது பிறகு மன்னிப்பு கேட்டு மன்னிப்பு வாங்கிய பாதிரியார் அனையவர் 2) தான் சர்தார்ஜியாக பிறந்திருந்தும் தான் தலித் இனத்தவர் என்று சர்டிபிகேட் உள்ளவர் 3) ஒரு சர்தார்ஜியாக இருந்தும் வெறும் சில்லறை காசுக்காக தன்னை கிருத்துவனாக மதம் மாறியவர் அவ்வளவு நல்லவர் 4) ஒவ்வொரு மாதமும் இவ்வளவு கிறித்துவ மாற்றம் இருக்கவேண்டும் என்று அயலநாட்டு கிறித்துவ கொடுக்கும் வெறும் சொற்ப கோடி ரூபாய்க்காக அல்லும் பகலும் அனவரதமும் தன்னை வருத்திக்கொண்டு பல ஏழை மக்களை இந்து மதத்திலிருந்து கிறித்துவனாக மாற்றிய உத்தம புருஷர் 5) மனைவியின் சொல்லுக்காக அவள் க்ரித்துவனாயினும் அவளுக்கு வெறும் கிறித்துவ சங்கம் கொடுக்கும் சொற்ப கோடி பணத்தை வாங்கி அவளுக்காக ஒரு சிறிய அலுவலகம் வைத்து கிறித்துவ மாற்றத்திற்க்காக உதவும் அருமையான புருஷன். இன்னும் என்ன அற்புதமான நடவடிக்கை வேண்டும் இவர் முதல்வர் ஆக????ஓம் நாசனமாய நமஹ என்று எவ்வளவு அழகாக முஸ்லீம் நேரு காங்கிரஸ் செய்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X