பொது செய்தி

இந்தியா

ஆப்கனில் முதலீடு - பிரதமரிடம் தான் முடிவு: கட்கரி தகவல்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு, இந்தியா முதலீடுகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளதாவது:ஆப்கன் நட்பு நாடாக இருந்த நிலையில் அங்கு இந்தியா முதலீடுகளை மேற்கொண்டது. இதுவரை 3 பில்லியன் டாலர் வரையிலான

புதுடில்லி: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு, இந்தியா முதலீடுகளை மேற்கொள்வது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளதாவது:



latest tamil news



ஆப்கன் நட்பு நாடாக இருந்த நிலையில் அங்கு இந்தியா முதலீடுகளை மேற்கொண்டது. இதுவரை 3 பில்லியன் டாலர் வரையிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அணை கட்டுமானம், சாலைகள் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.


latest tamil news



இந்நிலையில் தற்போது ஆப்கனில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்துள்ளது. தலிபான்களின் புதிய அரசுடனான உறவு குறித்து வெளியுறவுத் துறை தீர்மானிக்க வேண்டும். அதன் அடிப்படையில்தான் ஆப்கனில் தொடர்ந்து முதலீடுகள் மேற்கொள்வது குறித்தும் முடிவுகள் எட்டப்படும். குறிப்பாக, ஆப்கனில் உட்கட்டமைப்பு முதலீடுகள் மேற்கொள்வது குறித்து பிரதமர் மோடியும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும்தான் முடிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
21-செப்-202100:01:48 IST Report Abuse
Aarkay அந்த நிதியில் நம் நாட்டை முன்னேற்றுவோம். தேவையில்லாமல் தாலிபான்களுக்கு செலவு செய்தால், நாளை நமக்கெதிராகவே குண்டு வைப்பார்கள். இவர்களுடன் எந்த உறவும் தேவையில்லை. அவர்கள் பாகிஸ்தானை கட்டிக்கொண்டு அழட்டும்.
Rate this:
Cancel
20-செப்-202116:44:26 IST Report Abuse
அப்புசாமி இப்பிடிகொஞ்சம் கொஞ்சமா பேசி தூதரகம், விமான போக்குவரத்துன்னு நாமளும் ஆரம்பிச்சுடுவோம். இல்லேன்னா, சீனா முந்திக்கும்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-செப்-202116:17:35 IST Report Abuse
J.Isaac ஆட்சி மாறினால் முதலில் சிக்குவது இவர்தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X