அரசியல் தலைவர்களை சந்திப்பது ஆட்சியில் தலையிடுவதற்காக அல்ல: மோகன் பகவத்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி: '‛சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது அவர்களது நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அல்ல,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சங் ஸ்வயம் சேவக்கின் நோக்கம், நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். இந்து சமூக

புதுடில்லி: '‛சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது அவர்களது நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அல்ல,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.latest tamil news
ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சங் ஸ்வயம் சேவக்கின் நோக்கம், நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். இந்து சமூக அமைப்பால் நாட்டில் அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என சங் பரிவாரங்களை உருவாக்கிய கே.பி.ஹெட்கேவார் தெரிவித்துள்ளார். சங் பரிவார் அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளில் கூட்டுறவாக கம்யூனிஸ்ட்கள் கூட ஈடுபடுகிறார்கள்.


latest tamil newsஆட்சி அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், நிர்வாகிகள் தலையிடுகிறார்கள் எனக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினால், அதற்குப் பெயர் அதிகாரத்தில் பங்கெடுப்பது என அர்த்தமில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்தப் புகழுக்கும், பெயருக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்., என்பது சமுதாயத்தின் நம்பகமான நபர்களின் அமைப்பாகும்.


latest tamil newsகேரளா, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மிகவும் துன்பப்படுகிறார்கள். சமுதாயம் துன்பப்படும்போது, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளும் துன்பப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நோக்கம் ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாகும். சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் இதை நமக்குள் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். வெளியிலிருந்து அல்ல. தேசத்தின், சமூகத்தின், மதத்தின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நல்ல பணிகளைச் செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
20-செப்-202121:15:54 IST Report Abuse
sankaseshan There are only 2 organizations which come forward to help on case of national calamities like floods epidemic earthquake etc . RSS and Sri ramakrishna mission volunteerly without expecting anything in return .our biased media will not such activities. Once RSS Cadre participated in Republic day parade Half backed people like Appusamy don't know about this,
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-செப்-202120:24:10 IST Report Abuse
J.Isaac ஆதார் இன்றி, ஆதாரம் இன்றி ரயில் நிலையங்களிலும், , பேருந்து நிலையங்களிலும் நடைமேடைகளிலும் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களுக்கும், இரவு நேரங்களில் சென்னை பெங்களூர் போன்ற நகரங்களில் குப்பை பொறுக்கி வாழும் மக்களுக்கும், ஒரு பொருளை தொடவே பயந்து வாழ்ந்த சூழ்நிலையில் இந்தியா முழுவதும்தங்கள் உயிரை பொருட்படுத்தாமல் கழிவு பொருட்களை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களின் குடும்பங்களின் (100%இந்துக்கள்)வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி சமுதாயத்தில் அவர்கள் மதிப்பு உயர பாடுபடுங்கள்.
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
20-செப்-202119:59:53 IST Report Abuse
J.Isaac கேரளாகாரர்கள் சுயநலமிக்கவர்கள் அல்லவா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X