அரசியல் தலைவர்களை சந்திப்பது ஆட்சியில் தலையிடுவதற்காக அல்ல: மோகன் பகவத்| Dinamalar

அரசியல் தலைவர்களை சந்திப்பது ஆட்சியில் தலையிடுவதற்காக அல்ல: மோகன் பகவத்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (35)
Share
புதுடில்லி: '‛சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது அவர்களது நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அல்ல,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சங் ஸ்வயம் சேவக்கின் நோக்கம், நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். இந்து சமூக

புதுடில்லி: '‛சங்பரிவார் அமைப்புகளின் நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது அவர்களது நிர்வாகத்தில் தலையிடுவதற்காக அல்ல,'' என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.



latest tamil news




ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: சங் ஸ்வயம் சேவக்கின் நோக்கம், நல்ல மக்களை உருவாக்கி, தேசத்தைக் கட்டமைப்பதாகும். இந்து சமூக அமைப்பால் நாட்டில் அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும் என சங் பரிவாரங்களை உருவாக்கிய கே.பி.ஹெட்கேவார் தெரிவித்துள்ளார். சங் பரிவார் அமைப்புகளில் இணைந்து பல்வேறு பணிகளில் கூட்டுறவாக கம்யூனிஸ்ட்கள் கூட ஈடுபடுகிறார்கள்.


latest tamil news



ஆட்சி அதிகாரத்திலும், நிர்வாகத்திலும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர், நிர்வாகிகள் தலையிடுகிறார்கள் எனக் கூறுவது தவறான குற்றச்சாட்டு. ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்து, பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினால், அதற்குப் பெயர் அதிகாரத்தில் பங்கெடுப்பது என அர்த்தமில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவர்கள் எந்தப் புகழுக்கும், பெயருக்கும் ஆசைப்படமாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்., என்பது சமுதாயத்தின் நம்பகமான நபர்களின் அமைப்பாகும்.


latest tamil news



கேரளா, மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மிகவும் துன்பப்படுகிறார்கள். சமுதாயம் துன்பப்படும்போது, ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகளும் துன்பப்படுவார்கள். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நோக்கம் ஒட்டுமொத்த இந்து சமூகத்தையும் ஒருங்கிணைப்பதாகும். சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் இதை நமக்குள் இருந்து புரிந்துகொள்ள வேண்டும். வெளியிலிருந்து அல்ல. தேசத்தின், சமூகத்தின், மதத்தின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் நல்ல பணிகளைச் செய்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X