பொது செய்தி

தமிழ்நாடு

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021
Share
Advertisement
சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் புவியரசன் தெரிவித்தார்.இன்று செப்., 20ம் தேதி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும்,
RAINFALL, TAMILNADU, STATUS, DELTA DISTRICT, டெல்டா மாவட்டம், மழை அதிகம், வானிலை, ஆய்வு மையம்

சென்னை: ‛‛டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மைய தலைவர் புவியரசன் தெரிவித்தார்.

இன்று செப்., 20ம் தேதி: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக டெல்டா மாவட்டங்கள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 21 ம் தேதி: வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.,22 ம் தேதி: வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், திருவண்ணாமலைல தர்மபுரி, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.,23 ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் சேலம், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


latest tamil news


செப்.,24 ம் தேதி: டெல்டா மாவட்டங்கள் சேலம், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு சென்டி மீட்டரில்:
வாலாஜா (ராணிப்பேட்டை) 11 செ.மீ., செட்டிகுளம் (பெரம்பலுார்), வேப்பூர் (கடலுார்) தலா 9 செ.மீ., வீரகனுார் (சேலம்), கலயநல்லுார் (கள்ளக்குறிச்சி) தலா 8 செ.மீ., அம்முண்டி (வேலுார்), சாத்தனுார் அணை (திருவண்ணாமலை) தலா 7 செ.மீ., முசிறி (திருச்சி), ஏற்காடு (சேலம்), ஆம்பூர் (திருப்பத்துார்) தலா 6 செ.மீ.,
மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X