பொது செய்தி

இந்தியா

உத்தரகாண்ட்டில் பெருமழை; கடும் சேதம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையை ஒட்டிய பகுதியில் இன்று மேகவெடிப்பு ஏற்பட்டு, இடி மின்னலுடன் பெருமழை கொட்டித்தீர்த்தது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் இடி, மின்னலுடன் பெருமழை கொட்டியது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மலையை ஒட்டிய பகுதியில் இன்று மேகவெடிப்பு ஏற்பட்டு, இடி மின்னலுடன் பெருமழை கொட்டித்தீர்த்தது.



latest tamil news



உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் இன்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் இடி, மின்னலுடன் பெருமழை கொட்டியது; ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
வெள்ளத்தால் கரையோர பகுதிகளில் உள்ள வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது; பாலங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.


latest tamil news



பங்கதி கிராமத்தில் சாலைப்பணி மேற்கொண்டுள்ள தொழிலாளர்களின் தற்காலிக கூடாரங்கள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள உள்ளூர் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு உள்ளதாக முதல்வர் புஷ்கர்சிங் தாமி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில், மலைகளை ஒட்டியுள்ள நிலப்பகுதிகளில் தொடர்ச்சியான இதுபோன்று மேகவெடிப்பு ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202117:45:36 IST Report Abuse
அப்புசாமி அங்கே நடக்கற ஆட்சியைப் பாத்து வானமே அழுவுது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X