‛புரட்சி தலைவர்' ராகுல் ; பஞ்சாப் முதல்வரின் பாராட்டு மழை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னி, காங்., எம்.பி., ராகுலை ‛புரட்சிகர தலைவர்' என புகழாரம் சூட்டினார்.பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் இன்று (செப்.,20) பதவியேற்றார். அவருக்கு மாநில காங்., தலைவர் சித்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் சரண்ஜித் சிங் பேசியதாவது: காங்கிரஸ் ஒரு சாதாரண மனிதனை முதல்வராக்கியுள்ளது.
Punjab CM, Charanjit Singh Channi, Rahul, Revolutionary Leader, பஞ்சாப், முதல்வர், சரண்ஜித் சிங் சன்னி, ராகுல், புரட்சிகர தலைவர்

சண்டிகர்: பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்ற சரண்ஜித் சிங் சன்னி, காங்., எம்.பி., ராகுலை ‛புரட்சிகர தலைவர்' என புகழாரம் சூட்டினார்.

பஞ்சாப் மாநில முதல்வராக சரண்ஜித் சிங் இன்று (செப்.,20) பதவியேற்றார். அவருக்கு மாநில காங்., தலைவர் சித்து உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சரண்ஜித் சிங் பேசியதாவது:

காங்கிரஸ் ஒரு சாதாரண மனிதனை முதல்வராக்கியுள்ளது. ராகுல் புரட்சிகரமான தலைவர். எனக்கு கட்சியே உயர்ந்தது. முதல்வர் பதவியோ, அமைச்சரவையோ அல்ல. காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தின் படி அரசு செயல்பட்டு, நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாடுபடுவோம். பஞ்சாப் அரசு விவசாயிகளுடன் துணை நிற்கிறது.


latest tamil news



மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு நாங்கள் மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். விவசாயிகளின் மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணத்தை தள்ளுபடி செய்வோம். பஞ்சாப் மக்களுக்கு அமரீந்தர் சிங் நிறைய நல்ல பணிகளை செய்துள்ளார். அவருடைய பணியை நாங்கள் முன்னெடுப்போம். அமரீந்தர் சிங்கின் சிந்தனை இணையற்றது. அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு நான் ஒரு தீர்வை வழங்குவேன். ஊழியர் சங்கங்களுடன் பேசுவோம். அனைத்து வாக்குறுதிகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். எங்கள் நிர்வாகம் வெளிப்படையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. SUKUMAR CHEZHIAN - chennai,இந்தியா
20-செப்-202123:06:27 IST Report Abuse
R. SUKUMAR CHEZHIAN எங்கள் புரட்சி தலைவர் MGR. ராகுலை அப்படி கூப்பிடுவதை தமிழக மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. தயவுசெய்து புரட்சி தலைவர் MGR ரை அசிங்க படுத்த வேண்டாம்.
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
20-செப்-202122:10:45 IST Report Abuse
GANESUN பாவம் துரு வேருக்கு ஆத்திரத்தில நல்ல தமிழ் வார்த்தைகள் கூட வர மாட்டேங்குது..பாவம் பிரியாணி கடைக்காரர்கள், பார்லர் பெண்களிடம் வீரத்தை காட்டுபவர்கள்..பெத்தவங்ககிட்ட இருந்து நல்லொழுக்கத்தையும் கத்துக்கல, ஆசிரியர்களிடமிருந்து நற்றமிழைய் கத்துக்கல..
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
20-செப்-202121:55:06 IST Report Abuse
T.sthivinayagam குஜராத் மற்றும் பஞ்சாப் முதல்வர் மாற்றம் செய்யப்பட்டது, தேசிய கட்சிகள் ஒரு குறிப்பிட்ட சமுகத்தில் இருந்து பெரும்பாலானவர்கள் பக்கம் மாறுவதை காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X