பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதியில்லை: அகமதாபாத் மாநகராட்சி அதிரடி

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
அகமதாபாத்: 'தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை' என, குஜராத் மாநில அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்து உள்ளதாவது:ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பேப்பர் வடிவிலோ அல்லது மொபைலிலோ எப்போதும் கையில்

அகமதாபாத்: 'தடுப்பூசி போடாதவர்களுக்கு பொதுப் போக்குவரத்து மற்றும் பொது இடங்களில் அனுமதி இல்லை' என, குஜராத் மாநில அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்துள்ளது.



latest tamil news



இதுகுறித்து அகமதாபாத் மாநகராட்சி தெரிவித்து உள்ளதாவது:
ஆமதாபாத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பேப்பர் வடிவிலோ அல்லது மொபைலிலோ எப்போதும் கையில் வைத்திருக்க வேண்டும்.
மாநகராட்சியின் கீழ் உள்ள பொதுப் போக்குவரத்துகளில், பொது கட்டடங்கள், அரசு சார்ந்த பொது இடங்களில் சரிபார்க்கப்படும். அதன்படி, தடுப்பூசி போடாதவர்களுக்கு பேருந்துகள், நூலகங்கள், உடற்பயிற்சிக்கூடம், விளையாட்டு வளாகங்கள், நீச்சல் குளங்கள், கன்காரியா ஏரி முகப்பு, ஆற்றங்கரை உள்ளிட்ட இடங்களில் அனுமதியில்லை.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.


latest tamil news



குஜராத் அரசு பூங்காக்களின் இயக்குநர் ஜிக்னேஷ் படேல் கூறுகையில், 'கோவிட் தொற்றுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. தடுப்பூசி போடப்படாதவர்கள் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொண்டு 2வது தவணைக்காக காத்திருந்தாலும் அவர்கள் போக்குவரத்து சேவை மற்றும் கட்டடங்களில் நுழைய அனுமதியில்லை' என்றார்.
'இது ஒரு நல்ல முன்முயற்சி. அரசு மற்றும் நிர்வாகத்தின் இந்த வகையான கடுமையான முடிவுகளே மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும்' என, அகமதாபாத் மாநகராட்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuppiah - Jeddah,சவுதி அரேபியா
20-செப்-202123:04:56 IST Report Abuse
Karuppiah எல்லா மாநிலங்களிலும், நகரங்களிலும் இது போன்று செயல் படுத்த முடியுமா என்பது பற்றி மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்
Rate this:
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
20-செப்-202116:35:34 IST Report Abuse
Rengaraj நாட்டுக்கே ஒரு முன்மாதிரியான அறிவிப்பை அஹமதாபாத் நகராட்சி வெளியிட்டுஇருக்கிறது. பொது இடங்களில் கட்டுப்பாடு என்பது கட்டுப்பாடான, ஒழுங்குமுறையோடு கூடிய, வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் அவசியம் என்பதை மறைமுகமாக வலியுறுத்துகிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X