கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அதிமுக.,வின் புதிய நியமனத்தில் சட்டவிரோதம் இல்லை; ஐகோர்ட்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: அதிமுக.,வில் பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அறிவிக்கப்பட்டதில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி நியமனம் செல்லும்.முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான
ChennaiHC, ADMK, OPS, EPS, OPanneerselvam, Palanisamy, Coordinator, சென்னை, உயர்நீதிமன்றம், ஐகோர்ட், அதிமுக, ஓபிஎஸ், இபிஎஸ், பன்னீர்செல்வம், பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்

சென்னை: அதிமுக.,வில் பொதுச் செயலாளர் பதவியை கலைத்துவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் அறிவிக்கப்பட்டதில் எந்த சட்ட விரோதமும் இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனையடுத்து, ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமி நியமனம் செல்லும்.

முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மரணத்துக்குப் பின், 2017-ல் அதிமுக பொதுக்குழு கூடி சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தனர். அதோடு இவர் தமிழக முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தன. ஆனால் அதற்குள் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றார். பின் அதிமுக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி அதிமுக பொதுக்கூட்டத்தில் பறிக்கப்பட்டது.


latest tamil news



இதைத்தொடர்ந்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என புதியதாக இரு பதவிகள் அதிமுகவில் உருவாக்கப்பட்டது. இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் அறிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து திருச்செந்தூரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.


latest tamil news



அந்த மனுவில், ‛அதிமுக கட்சி விதிப்படி, புதிய பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை. பொதுச்செயலாளர்தான் இந்த பதவியை உருவாக்கி இருக்க வேண்டும். அதனால் விதிமுறைப்படி இந்த நியமனம் தவறு. இதுசம்பந்தமாக கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் ஏற்று பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,' என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, ‛கட்சியின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி அளித்த தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுள்ளதில் எந்த சட்ட விரோதமும் இல்லை. இதில் உள்கட்சி விதிகள் பின்பற்றப்பட்டதா, இல்லையா என தேர்தல் ஆணையம் ஆராய முடியாது,' என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது. மேலும், தேர்தல் ஆணையம், உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக சிவில் வழக்கு தான் தொடர முடியும் எனவும் குறிப்பிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vns - Delhi,யூ.எஸ்.ஏ
20-செப்-202121:13:18 IST Report Abuse
vns வாய்தா வழக்கறிஞ்ஞர்களின் (??) வேலை பாதுகாப்பு (job security) விஷயம்.
Rate this:
Cancel
20-செப்-202120:22:09 IST Report Abuse
பேசும் தமிழன் நன்றாக விசாரித்து பாருங்கள்.. ராம்குமாரின்... பின்னணியை ஆராய்ந்தால்... மன்னார்குடி அல்லது கோபாலபுரம் தொடர்பு வெளியே வரலாம்
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-செப்-202118:23:38 IST Report Abuse
Narayanan சிவில் வழக்கு போடுங்கள் . உங்களின் பேரன் வந்தாலும் நீதிமன்றம் தீர்க்காது . வழக்கு நடந்துகொண்டே இருக்கும் வாய்தா வாய்தா என்று . இப்படி திமுக சொல்லிக்கொடுத்தபடி ஒரு வழக்கை தொடர்ந்தது தேவையற்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X