ரஷ்ய பல்கலைக்கழகத்தில் மாணவர் துப்பாக்கிச்சூடு; 8 பேர் பலி

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.,20) மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டார்.அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள்
ரஷ்யா, பல்கலைக்கழகம், துப்பாக்கிச்சூடு, 8பேர், பலி

மாஸ்கோ: ரஷ்யாவின் மத்தியப் பகுதியில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் இன்று (செப்.,20) மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டார்.

அந்த இளைஞர் வித்தியாசமான உடையுடன், தலையில் கவசத்துடன், கையில் துப்பாக்கியை ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையும் காட்சிகள் பல்கலைக்கழக சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், வாலிபருக்குப் பயந்து ஜன்னல்கள் வழியாக மாணவர்கள் கீழே குதிக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது.


latest tamil news


ரஷ்யாவில் பள்ளி, கல்லூரி போன்ற கல்வி நிலையங்களில் கண்காணிப்பும், பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் கிழக்கு ரஷ்யாவில் ஒரு கல்லூரியில் 19 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்தார். துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட மாணவரும் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன்னதாக 2018ல், க்ரிமியாவில் கெர்ச் தொழில்நுட்பக் கல்லூரியில் வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் இன்று 8 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் காயங்களுடன் பிடிபட்டான். இதன் காரணமாக ரஷ்யாவில் துப்பாக்கி விற்பனை, துப்பாக்கி வைத்திருக்க உரிமம் வழங்குதல் ஆகியவற்றில் புதிய கொள்கைகளை வகுக்க அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-202118:15:01 IST Report Abuse
டுமீலன் மர்ம நபரா?
Rate this:
Cancel
Nesan - JB,மலேஷியா
20-செப்-202117:31:29 IST Report Abuse
Nesan அடுத்தவன் வயிற்றில் அடித்து பிழைக்க நினைப்பவனுக்கு இது தான் கெதி. ஒரு காலத்தில் ரஷ்ய பல்கலைக்கழகத்தில் படிப்பது என்றால் மிக பெரிய கவுரவம், மரியாதை.... இப்ப தலைவர்கள் டூப் போட்டு நாட்டை ஆண்டா இது தான் வரலாறு காட்டும் உண்மை. நேர்மை அற்ற மக்கள் மீது அக்கறை இல்லாதா தலைமைகள் தான் இன்று உலக ஆளுகின்றன, அப்ப இது தான் கெதி உலகிற்கு
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
20-செப்-202117:03:29 IST Report Abuse
Marai Nayagan கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான்...துப்பாக்கி விற்கும் மேற்கத்திய நாடுகள் அப்படியே...ஆயுத விற்பனை என அடுத்த நாட்டை சுரண்டி பிழைக்கும் கூட்டம் அதற்கான விலையை கொடுத்தே ஆகா வேண்டும் போல...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X