பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி ஏர்போர்ட் ஓடுதள விரிவாக்கம்: 106 ஏக்கர் நிலம் ஆர்ஜிதம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம் தர ஆர்ஜிதப் பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும். ஓடுதளம் 3,300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர்
புதுச்சேரி, விமானநிலையம், ஓடுதளம், விரிவாக்கம், 106 ஏக்கர், நிலம், ஆர்ஜிதம்

புதுச்சேரி: புதுச்சேரி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு 106 ஏக்கர் நிலம் தர ஆர்ஜிதப் பணிகளை தமிழக அரசு துவக்கியுள்ளது.

புதுவை லாஸ்பேட்டையில் விமான நிலையம் உள்ளது. இங்குள்ள ஓடுதளம் 1,502 மீட்டர் மட்டுமே கொண்டது. இதில் சிறு விமானங்கள் மட்டுமே வந்துசெல்ல முடியும். ஓடுதளம் 3,300 மீட்டர் இருந்தால்தான் பெரியரக விமானங்கள் வந்து செல்ல முடியும். இதற்காக கூடுதலாக 1,800 மீட்டர் ஓடுதளம் அமைக்க 240 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.


latest tamil news



இதற்காக விமான நிலையத்தை ஒட்டியுள்ள தமிழகப் பகுதிகளான விழுப்புரம் மாவட்டம், வானூர் தாலுக்காவைச் சேர்ந்த மொரட்டாண்டி, ஆரோவில் பகுதியில் கூடுதல் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி எடுக்கும் புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் இதற்கான கூட்டத்தை விமான நிலையத்தில் நடத்தியிருந்தார்.

கவர்னர் தமிழிசையும், தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசி, நிலம் கையகப்படுத்தி வழங்க கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு இதுபற்றி கவர்னர் தமிழிசை வலியுறுத்தினார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாகப் புதுவை அரசு சார்பில் மத்திய அரசிடம் விளக்கப்பட்டது.

விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பாக அமைச்சர் லட்சுமி நாராயணன் தெரிவித்ததாவது: தமிழக அரசு முதல் கட்டமாக 106 ஏக்கர் நிலத்தைப் புதுவை அரசுக்குக் கையகப்படுத்தி வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. விழுப்புரம் கலெக்டரிடம் தொலைபேசியில் பேசியபோது, நில ஆர்ஜித நடவடிக்கையைத் துவங்கியுள்ளதாகத் தெரிவித்தார். ஆர்ஜிதம் செய்த பின்பு அதற்கான தொகையை மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
20-செப்-202122:18:36 IST Report Abuse
Easwar Kamal நன்று விமான நிலையத்தை சர்வதேச அளவுக்கு யுயிர்த்தி தமிழக மக்களுக்கு உறுதுணைக இருக்கட்டும். நம்மை விட சிறிய மாநிலம் கேரளத்தில் 4 சர்வதேச விமான நிலையம் உள்ளது. தமிழகத்தில் இருந்து இப்போது நிறைய மக்கள் வெளி நாடு செல்கின்றார்கள் அவர்களும் பயன் பெறட்டும்.
Rate this:
Cancel
RG RG - Chennai,இந்தியா
20-செப்-202119:36:59 IST Report Abuse
RG RG அது சரி சார் , தமிழகத்துல நிலம் ஒதிக்கியாச்சு , புதுச்சேரி யில இருக்குற நிலத்தை எப்போ ஒதுக்க போறீங்க
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
20-செப்-202116:31:49 IST Report Abuse
JeevaKiran பரவாயில்லையே. சீக்கிரமாக செய்து முடியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X