பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்துக்கு 50 லட்சம் தடுப்பூசி தேவை: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
சென்னை: ‛‛தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வேண்டும்,'' என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக செயல்படுத்தப்பட்டு நடைபெற்று
தமிழகம், கோவிட், தடுப்பூசி, 50 லட்சம் தேவை, பிரதமருக்கு, ஸ்டாலின், கடிதம்

சென்னை: ‛‛தமிழகத்துக்கு கூடுதலாக 50 லட்சம் தடுப்பூசி வேண்டும்,'' என்று பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்வோர் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் கடந்த இரண்டு வாரங்களாக செயல்படுத்தப்பட்டு நடைபெற்று வருகிறது.


latest tamil news



கடந்த 12ம் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 29 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல் 2ம் கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 16லட்சத்து, 43ஆயிரத்து, 879 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது தமிழக அரசிடம் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்; தமிழகத்தில் கோவிட் தடுப்பூசிகள் அதிகளவில் போடப்பட்டு வரும் நிலையில் அக்டோபர் 31ம் தேதிக்கு முன் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசிகளை போடுவதற்காக வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வழங்க வேண்டும். வாரத்தில் ஆறு நாட்களுக்கு தினமும் 5 லட்சமும், ஏழாவது நாளில் 20 லட்சம் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பூசி முகாம் மூலம் அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவதால் கூடுதல் தேவை ஏற்படுகிறது. இவ்வாறு ஸ்டாலின் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Madurai,இந்தியா
20-செப்-202123:31:39 IST Report Abuse
தமிழன் கருப்பு துணி காட்டி கேளுங்க தலீவரே.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
20-செப்-202122:07:22 IST Report Abuse
R. Vidya Sagar கோவின் இணையதளத்தில் ஊசி போடும் இடங்களின் விபரங்களை வெளியிட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும். தமிழ் அந்த இணையதளத்தில் இல்லை என்று மட்டும் பெரிய கூச்சல் போட்டார்கள்.
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
20-செப்-202122:01:17 IST Report Abuse
Narayanan விலாசத்தை மத்தியஅரசு என்று எழுதுங்கள் ஸ்டாலின் .. ஒன்றிய அரசு என்று எழுதினால் கடிதம் திரும்பிவிடும் விலாசம் தவறு என்று. பின்னர் மோடிஜி அனுப்பவில்லை என்று பிலாக்கணம் வைக்காதீர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X