தஞ்சம் புகும் ஹைத்தி அகதிகள்; விமானத்தில் ஏற்றி திருப்பி அனுப்பும் அமெரிக்கா

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புளோரிடா: அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ உள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநில டெல் ரியோ அருகே, இரு நாட்டு எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள ஆற்றின் ஒரு பகுதி அமெரிக்காவாகவும், ஒரு பகுதி மெக்சிகோவாகவும் உள்ளது. அந்த ஆற்றின் வழியாக வெளிநாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுவர். இதைத் தடுக்க எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்

புளோரிடா: அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ உள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநில டெல் ரியோ அருகே, இரு நாட்டு எல்லை அமைந்துள்ளது. அங்குள்ள ஆற்றின் ஒரு பகுதி அமெரிக்காவாகவும், ஒரு பகுதி மெக்சிகோவாகவும் உள்ளது. அந்த ஆற்றின் வழியாக வெளிநாட்டு அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைந்து விடுவர். இதைத் தடுக்க எல்லையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



இந்நிலையில் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக ஹைத்தி மற்றும் பெரு நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான அகதிகள் டெல் ரியோ பாலத்திற்கு அருகே வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹைத்தி நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாமல் தடுக்க, எல்லையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் கூடியதால், அந்த பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
அகதிகள் கூட்டத்தில் ஏராளமான கர்ப்பிணி பெண்களும் இருக்கிறார்கள். இவர்களில் 2 பேருக்கு நேற்று குழந்தை பிறந்தது. கைக்குழந்தைகளுடன் ஏராளமான பெண்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் தவிக்கிறார்கள். அகதிகள் அனைவரையும் திருப்பி அனுப்ப அமெரிக்கா தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது.



latest tamil news



அதன்படி அகதிகள் விமானங்களில் ஏற்றப்பட்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். கடந்த 17ம் தேதியில் இருந்து இதுவரை ஹைத்திக்கு 3,300 அகதிகள் அனுப்பப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். 'டெல் ரியோ பாலத்தின் அடியில் தங்கியிருக்கும் 12,662 அகதிகளை திருப்பி அனுப்ப தினமும் விமானங்கள் இயக்கப்படும். விமானங்களை அதிகரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த விமானங்கள் புலம்பெயர்ந்தவர்களை ஹைத்தி அல்லது அவர்கள் விரும்பும் பிற நாடுகளுக்கு அழைத்துச் செல்லும்' என, அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைவர் கூறி உள்ளார்.


latest tamil news



அமெரிக்க எல்லையில் முகாமிட்டுள்ள ஹைத்தி அகதிகளில் பலர் நாடு திரும்புவதை விரும்பவில்லை. மெக்சிகோவில் தங்கியிருக்கவே திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-செப்-202107:24:30 IST Report Abuse
NicoleThomson எதனால் ஹைத்தி மற்றும் மெக்சிகோவில் இருந்து அகதிகள் என்ற போர்வையில் செல்லுகிறார்கள்? இங்கே ரோகின்யங்கள் என்ற போர்வையில் வெளிநாட்டு முஸ்லிம்கள் இனப்பெருக்கம் செய்து மற்றொரு நாட்டை நாறடிக்கிறார்கள் அது போலவா இவர்களும்?
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-செப்-202115:47:24 IST Report Abuse
தமிழவேல் நல்ல வேலையா, புலம் பெயர்ந்தவர்களை சொந்த ஊருக்கு, நடந்தே போக சொல்ல வில்லை.
Rate this:
Cancel
Soumya - Trichy,இந்தியா
21-செப்-202101:04:50 IST Report Abuse
Soumya அகதிகளில் மூர்க்கனுங்களுக்கு இடம் கொடுக்கக்கூடாது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் நினைப்பான்
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
21-செப்-202109:34:52 IST Report Abuse
mathimandhiriadhu...
Rate this:
mathimandhiri - chennai,இந்தியா
21-செப்-202109:59:45 IST Report Abuse
mathimandhiriஅது எங்கள் மார்க்கம் சொல்லி வைத்திருக்கிறது என்பான்////...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X