பொது செய்தி

இந்தியா

ஓணம் பம்பர்: பாத்திரம் கழுவும் தொழிலாளிக்கு ரூ.12 கோடி 'ஜாக்பாட்'

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி, 45, என்பவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது. கேரளாவின் வயநாட்டின் பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி, துபாயில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம், 'கூகுல் பே' மூலம் பணம் அனுப்பி 'ஓணம்

திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாட்டைச் சேர்ந்த சைதல்வி, 45, என்பவருக்கு ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.12 கோடி பரிசு கிடைத்துள்ளது.



latest tamil news



கேரளாவின் வயநாட்டின் பனமரம் பகுதியைச் சேர்ந்தவரான சைதல்வி, துபாயில் ஒரு உணவகத்தில் சமையல் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கோழிக்கோட்டில் இருக்கும் அவருடைய நண்பரிடம், 'கூகுல் பே' மூலம் பணம் அனுப்பி 'ஓணம் பம்பர்' லாட்டரி ஒன்றை வாங்கச் சொல்லியிருக்கிறார். நண்பரும், கடையில் இருந்த கடைசி சில டிக்கெட்டுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சைதல்வியின் வாட்ஸ் ஆப்பிற்கு அதை அனுப்பி வைத்திருக்கிறார்.


latest tamil news



இந்நிலையில் நேற்று (செப்., 19) அந்த லாட்டரி சீட்டின் முடிவு வெளியானது. அதில், சைதல்விக்கு முதல் பரிசான, ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. இதையறிந்த சைதல்வி, துபாயிலிருந்து கிளம்பி தன் நண்பரிடம் டிக்கெட்டைப் பெற்று அதை வாங்கிய இடத்தில் ஒப்படைக்க இருக்கிறார். ரூ.12 கோடியில், வருமான வரி, ஏஜெண்டு கமிஷன் போக ரூ.7.56 கோடி கிடைக்கும்.

சமையல் பாத்திரங்களைக் கழுவி வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருந்த தொழிலாளிக்கு கிடைத்த இந்த பெரிய பரிசுச் செய்தி, கேரளத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
21-செப்-202100:06:11 IST Report Abuse
Aarkay உழைப்பை நம்புங்கள் அதிர்ஷ்டத்தை நம்ப வேண்டாம். பேராசை தேவையில்லை. இருப்பதை வைத்து சந்தோஷமாய் இருப்போம்.
Rate this:
Cancel
Karuppiah - Jeddah,சவுதி அரேபியா
20-செப்-202123:07:52 IST Report Abuse
Karuppiah ஒழுங்கா வேலை பாத்து சம்பாதிச்ச ஆள சோம்பேறியாகிட்டாங்களே
Rate this:
Cancel
s.மாடசாமி, சிலுக்குவார்பட்டு அந்த லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் எவ்வாறு வாங்குவது? கேரளா சென்றால் தான் வாங்க வேண்டுமா?
Rate this:
Sanny - sydney,ஆஸ்திரேலியா
21-செப்-202105:46:02 IST Report Abuse
Sanny உங்களுக்கு அதிஷ்டம் இருந்தால் எந்த ஊரில் வாங்கினாலும், என்ன டிக்கெட் வாங்கினாலும் பரிசு உங்களுக்கே, Wait for your Lucky Day....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X