மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச்சென்று கோவிட் தடுப்பூசி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.தொண்டு நிறுவனமான இவாரா அறக்கட்டளை சார்பில் வக்கீல் பங்கஜ் சின்ஹா ஆஜராகி மனுவில் தெரிவித்ததாவது: இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். இந்திய
மாற்றுத்திறனாளிகள், வீடு தேடி, கோவிட், தடுப்பூசி, மத்திய அரசு, உச்சநீதிமன்றம், நோட்டீஸ்

புதுடில்லி: நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை ஏற்ற உச்ச நீதிமன்றம், 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

தொண்டு நிறுவனமான இவாரா அறக்கட்டளை சார்பில் வக்கீல் பங்கஜ் சின்ஹா ஆஜராகி மனுவில் தெரிவித்ததாவது: இரு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளோம். இந்திய மருத்துவக் கூட்டமைப்பு கூறுகையில், வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்தால்தான் அதிகமானவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த முடியும் எனத் தெரிவித்தது. கேரளா, ஜார்க்கண்ட் மாநிலங்கள் இந்த முயற்சியை முன்னெடுத்தன.


latest tamil news



மாற்றுத்திறனாளிகள் வீடு தேடித் சென்று தடுப்பூசி செலுத்துவதை சாத்தியமாக்க வேண்டும், அவர்களுக்கு மட்டும் உதவும் வகையில் கோவிட் தளத்தில் உதவி எண்கள் வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தைக் கடைப்பிடிக்க அனைத்து மாநிலங்களுக்கும், மத்திய யூனியன் பிரதேசங்களுக்கும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் டிஒய் சந்திரசூட், பி.வி.நாகரத்னா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

அப்போது நீதிபதிகள் அமர்வு, சொலிசிட்டர் ஜெனரலிடம், “மாற்றுத்திறனாளிகள் கொரோனா தடுப்பூசி செலுத்த தனியாக மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள், ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், திட்டமிடல்கள் என்ன என்பது குறித்து இரு வாரங்களில் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்,” என உத்தரவிட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்ச்செல்வன் - Chennai,இந்தியா
20-செப்-202119:54:50 IST Report Abuse
தமிழ்ச்செல்வன் முன்பிருந்த காங்கிரஸ் அரசுக்கு (இப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருந்தால்) இப்படியெல்லாம் உத்தரவு போட்டிருக்க முடியுமா ?
Rate this:
Cancel
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-செப்-202118:34:26 IST Report Abuse
கௌடில்யன் குடும்ப கட்டுப்பாடு தடுப்பூசியுடன் இனைந்து ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X