பெண் கல்வி மறுக்கப்பட்டால் ஆப்கனில் மீளமுடியாத விளைவுகள் ஏற்படும்: யுனெஸ்கோ, யுனிசெப் எச்சரிக்கை

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
ஜெனிவா: தலிபான் பயங்கரவாதிகள் காபூல் நகரைக் கடந்த மாதம் கைப்பற்றியபின், முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்படத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கான உரிமைகளை மறுத்து வருகின்றனர். அந்தவகையில், ஆப்கனில் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட்ட தலிபான்கள், 'மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்' என்றனர். இதனால் மாணவிகளுக்கு கல்வி

ஜெனிவா: தலிபான் பயங்கரவாதிகள் காபூல் நகரைக் கடந்த மாதம் கைப்பற்றியபின், முன்னர் அளித்த வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்படத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, பெண்களுக்கான உரிமைகளை மறுத்து வருகின்றனர். அந்தவகையில், ஆப்கனில் அனைத்து பள்ளிகளையும் திறக்க உத்தரவிட்ட தலிபான்கள், 'மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டும் பள்ளிக்கு வரலாம்' என்றனர். இதனால் மாணவிகளுக்கு கல்வி மறுக்கப்பட்டது.



latest tamil news



இந்நிலையில், யுனிசெப், யுனெஸ்கோ அமைப்பு, பெண் குழந்தைகள் படிக்க தடை விதித்த தலிபான்களின் உத்தரவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனெஸ்கோ விடுத்த அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:
அனைத்து நிலைகளிலும் பெண் குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்பட்டால், அவர்களைப் பள்ளிகளுக்கு அனுமதிக்காவிட்டால் மீளமுடியாத பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக, உயர்நிலைப் பள்ளி அளவில் மாணவிகளுக்குத் தாமதமாக அனுமதி அளிப்பது அவர்களின் கல்வியிலும், வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.


latest tamil news



மேலும், கல்வி இடைநிற்றல் விகிதத்தை அதிகப்படுத்தி, எதிர்விளைவாக குழந்தைத் திருமணத்துக்கு இட்டுச் செல்லும். மேலும், மாணவர்கள், மாணவிகளுக்கு இடையிலான கல்வி கற்கும் இடைவெளியே அதிகப்படுத்தி, பெண் குழந்தைகள் உயர் கல்வி பெறுவதையும், வாய்ப்புகளையும் பறிக்கும். ஆப்கனில் கல்வி வாய்ப்புகளைப் பெண்களுக்கு வழங்கியதன் மூலம் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார்கள். அதைப் பாதுகாக்க வேண்டும்.

படித்த மாணவர்கள், மாணவிகள் எதிர்காலத்தில் ஆப்கனை செம்மைப்படுத்தக் கூடியவர்கள். கல்வி உரிமை மூலம் இரு பாலின மாணவர்களும் பலன் அடைய வேண்டும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news



'ஆப்கனின் எதிர்காலம் நன்கு படித்த மாணவர்கள், மாணவிகளைச் சார்ந்திருக்க வேண்டும். ஆதலால் ஆப்கனை நிர்வாகம் செய்யும் ஆட்சியாளர்கள், அனைத்துக் குழந்தைகளும் கல்வி உரிமையைப் பெற சமமான அளவில் வாய்ப்பை வழங்க வேண்டும்' என, யுனிசெப் வலியுறுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - Hyderabad,இந்தியா
21-செப்-202105:59:43 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே நாடுகள் பலவும் அரசியல் என்று ஈனதனமான காரியங்களில் ஈடுபடுவது வேதனை ஒரு மாநில அரசியல் katchithalavare அவரின் திருட்டுத்தனம் மறைக்க பல தற்கொலைகள் நிகழ்துகையில் இந்த பாக் அமெரிக்கா, சீனா மாதிரி நாடுகள் எவ்வளவு நடத்தும் நடுவில் துருக்கியை விட்டுவிட்டேன்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-செப்-202123:45:09 IST Report Abuse
Natarajan Ramanathan மூர்க்க மதத்தில் பெண்ணாக பிறப்பதை விட ஒரு பன்றியாக பிறப்பது மேலானது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-செப்-202123:44:00 IST Report Abuse
Natarajan Ramanathan மூர்க்க மதத்தில் பெண்ணாகப் பிறப்பதே ஏழேழு ஜென்மங்களில்செய்த பாவம்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X