அரசியல் செய்தி

தமிழ்நாடு

எனக்கு வங்கியில் ரூ 40 கோடி கடன் உள்ளது: மாஜி அமைச்சர் வீரமணி

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
திருப்பத்துார்;எனக்கு வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் உள்ளதாக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரணியின் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது ஆதரவாளர்கள் என 35 இடங்களில் கடந்த 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தில் நகை, கார், மணல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள்

திருப்பத்துார்;எனக்கு வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் உள்ளதாக முன்னாள் அமைச்சர் வீரமணி கூறினார்.



latest tamil news




முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரணியின் திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை இடையம்பட்டியில் உள்ள வீடு, அவரது ஆதரவாளர்கள் என 35 இடங்களில் கடந்த 16 ம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தில் நகை, கார், மணல் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக வீரமணி மீது வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் திருப்பத்துாரில் மாஜி அமைச்சர் வீரமணி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சி தேர்தலில் எனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தவறான செய்திகள் வருகின்றன. பத்திரிக்கை தர்மம் உள்ளது. ஆதாரத்துடன் செய்திகளை வெளியிடுங்கள்.லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் என் வீட்டில் பணமோ, கிலோ கணக்கில் நகையோ, கைப்பற்றப்படவில்லை.

என்னிடம் கைப்பற்றிய 5,600 ரூபாய் மற்றும் 500 பவுன் நகைக்கு கணக்கு உள்ளது என்பதால் திருப்பி கொடுத்து விட்டனர்.நான் 7 வது படிக்கும் போதே என் தந்தை பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார். நான் தற்போது வைத்திருக்கும் ரோல்ஸ் ராய் கார் மிகவும் பழமையனது. அதன் மதிப்பு 5 லட்சம் ரூபாய் தான் இருக்கும். சிறு வயதில் இருந்தே கார் வாங்கி வருவது எனக்கு பழக்கம். பள்ளியில் படிக்கும் போதே ஜெர்மன் மெர்சிடீஸ் பென்ஸ் கார் வைத்திருந்தேன்.நான் நடத்திய பீடித் தொழில், விவசாயத்தில் 10 ஆயிரத்திற்கும் மேல் வேலை செய்துள்ளனர். என் மனைவிகளும் வசதி படைத்தவர்கள்.

வீட்டின் பின்புறம் வீடு கட்டுவதற்காக மணல் வாங்கி வைத்திருந்தேன். அதற்கு ரசீதும் என்னிடம் உள்ளது.அமெரிக்க டாலர் 1. 75 லட்சம் மதிப்புள்ளது மட்டுமே கைப்பற்றப்பட்டது. என் மகள் ஆஸ்தியேலியாவில் படிக்கச் செல்வதால் சட்ட விதிகளின் படியே வெளிநாட்டு கரன்சிகளை வைத்திருந்தேன். ஐந்தாயிரம் டாலர்கள் வரை வைத்துக் கொள்ளலாம் என சட்டம் உள்ளது.


latest tamil news





தவறான தகவல்கள்



நான் எதையும் மறைக்கவில்லை. நான் ஆடம்பரத்தை விரும்பாதவன், மிகவும் எளிமையானவன். கட்டி கட்டியாக தங்கம், வைரம் எல்லாம் எங்களுக்கு எதற்கு.எனக்கு வங்கியில் 40 கோடி ரூபாய் கடன் உள்ளது. என் சொத்துக்கள் அண்ணன், தம்பிகள் பெயரில் கிடையாது. பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே நான் வருமான வரி கட்டி வருகிறேன். ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு வைத்திருக்கிறேன்.

சமூக வலைதளத்தில் என்னை பற்றி தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அது முற்றிலும் தவறு. இந்த விவகாரத்தை அரசியலாக்காமல், என் பெயர், புகழ், பாதிக்கப்படாமல் உண்மை செய்திகளை மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
21-செப்-202111:28:37 IST Report Abuse
சீனி நிதின் கட்காரி, அனுமதி இல்லாம் கட்டப்பட்ட மாமனார் வீட்டை இடித்தார், வருமானமே இல்லாமல் 1500 கோடி வீடு வைத்துள்ள மருமகன் வீட்டை ரெய்டு பண்ணுவாங்களா?
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
21-செப்-202111:06:19 IST Report Abuse
சீனி முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் வீரமணியின் பேட்டி முழுதாக பார்த்தேன், எந்த அமைச்சரும் ரெய்டு ஆன பிறகு இவ்வளவு தெளிவா சொத்து விபரம் பற்றி பேட்டி கொடுக்கவில்லை. போன தேர்தல் விண்ணப்பத்தில் சொன்னபடி தான் சொத்து வைத்துள்ளார். அவரும் ஒரு தொழில் அதிபர் தான், அரசியல்வாதிகள் அனைவரையும் வில்லனாக பார்ப்பது சமுதாயத்திற்க்கு நல்லதல்ல. 2500 டாலர் என்பது 2 லட்சம், சென்னையில் உள்ள பிரபல பிரியாணி கடைகளில் தினசரி விற்பனை இதைவிட அதிகம். அதுவும் அவரது மகள் படிப்புக்கு என்று சொன்னார். அரசியல்வாதிகளுக்கும் தனிமனித உரிமை என்று உள்ளது, தொழில் செய்யவேண்டும், பிள்ளைகளை படிக்கவைக்கவேண்டும். எனவே தவறு செய்தால் கோற் தண்டனை கொடுக்கும். மண்டலம் வாரியாக சிறப்பாக செயல்பட்ட அதிமுக அமைச்சர்கள்(முன்பு கோவை மண்டல அமைச்சர் வேலுமணி வீட்டில் ரெய்டு நடத்தியது எதனால் என்று அனைவருக்கும் தெரியும்) மீது ரெய்டு நடத்தி அவர்களை பழிவாங்கும் திமுக, அவர்களின் ஆதரவு அல்லக்கை ஊடகங்கள் வீண் பழியை அனைவர் மீதும் வாரி இறைப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இது எதிர்கட்சியாக சிறப்பாக செயல்படும் அதிமுகவை அழிக்கும் முயற்சியாகும்,
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - Hyderabad,இந்தியா
21-செப்-202105:55:36 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே சோனு சூட் வீட்டிலும் இது போல ஒரு சோதனை
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-202100:03:42 IST Report Abuse
Aarkayஆனால், எங்கள் சூட் எச்சில் கையால் கூட காக்காய் ஓட்டமாட்டார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X