துறவி தற்கொலை பிரதமர் இரங்கல்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
பிரயாக்ராஜ் : துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி, 72, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மோண்டா என்ற இடத்தில் உள்ளது பாகம்பரி மடம். இங்கு அகில பாரதிய அகரா பரிஷத் என்ற துறவியர் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி. நேற்று மாலை நரேந்திர கிரி
உபி., மடாதிபதி,  தற்கொலை, போலீஸ், விசாரணை


பிரயாக்ராஜ் : துறவியர் அமைப்பான அகில பாரதிய அகரா பரிஷத் தலைவர் நரேந்திர கிரி, 72, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் மோண்டா என்ற இடத்தில் உள்ளது பாகம்பரி மடம். இங்கு அகில பாரதிய அகரா பரிஷத் என்ற துறவியர் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி. நேற்று மாலை நரேந்திர கிரி மடத்தில் தூக்கில் தொங்கியதை சீடர்கள் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.


latest tamil news



போலீசுக்கு தகவல் அளித்தனர்.போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினர். அந்த அறையில் கிரி எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினர். அதில், மன உளைச்சலில் இருப்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், மடத்தில் சீடர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எழுதி வைத்திருந்தார்.ஏப்ரலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கிரி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். குணமடைந்து மடத்துக்கு திரும்பினாலும் மனநிம்மதி இன்றியே இருந்துள்ளார்.தேசிய அளவில் மிகப்பெரும் துறவியர் அமைப்பான அகில பாரதிய அகாரா பரிஷத் தலைவர் தற்கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் நரேந்திர கிரி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202108:40:18 IST Report Abuse
Saikumar C Krishna தற்கொலை செய்து கொள்பவர் எப்படி மடாதிபதியாகவும், இந்து மத குருமாராகவும் இருக்க முடியும். இவர்கள் இந்து மதத்தை அழிக்காமல் விட மாட்டர்கள் போல். மத குரு என்பவர் சாதாரண பிரஜைகளின் பிரச்சனைக்கு | மன உளச்சலுக்கு ஆறுதல் தருபவராக இருக்க வேண்டும். சாமியர்கள், முற்றும் துறந்தவர்கள், அவர்களுக்கு மன உலைச்சலா? வேடிக்கை
Rate this:
Cancel
Siva Panchalingam - Toronto,கனடா
21-செப்-202107:04:46 IST Report Abuse
Siva Panchalingam மன உளைச்சல், தற்கொலை என்பது ஓர் துறவிக்கும் ஏற்படுமா? ஓர் ஆத்மீக துறவி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாமல் போயிடுச்சு
Rate this:
Cancel
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
21-செப்-202106:10:56 IST Report Abuse
N Annamalai இவருக்கு என்ன மனா உளைச்சல் .சோகம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X