சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : செப் 20, 2021
Share
Advertisement
மறதிக்கு காரணம்மூளையில் ஏற்படும் நோய்களில் ஒன்று 'டிமென்ஷியா'. இதற்கு முக்கிய காரணம் 'அல்சீமர்' எனும் ஞாபக குறைபாடு தான். 'அல்சீமர்' என்பது ஒருவகை மறதி நோய். இது மூளை செல்லை பாதிக்கிறது. இதனால் மனக்குழப்பம், நீண்டகால ஞாபகமறதி, பதட்டம் ஏற்படுகிறது. ஜெர்மனின் அலாய்ஸ் அல்சைமர்ஸ் 1906ல் இந்நோய் பற்றி கண்டறிந்தார். இதனால் இவரது பெயரே வைக்கப்பட்டது. இது 60


மறதிக்கு காரணம்



மூளையில் ஏற்படும் நோய்களில் ஒன்று 'டிமென்ஷியா'. இதற்கு முக்கிய காரணம் 'அல்சீமர்' எனும் ஞாபக குறைபாடு தான். 'அல்சீமர்' என்பது ஒருவகை மறதி நோய். இது மூளை செல்லை பாதிக்கிறது. இதனால் மனக்குழப்பம், நீண்டகால ஞாபகமறதி, பதட்டம் ஏற்படுகிறது. ஜெர்மனின் அலாய்ஸ் அல்சைமர்ஸ் 1906ல் இந்நோய் பற்றி கண்டறிந்தார். இதனால் இவரது பெயரே வைக்கப்பட்டது. இது 60 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகம் தாக்குகிறது. இந்நோய் பாதித்தவர்களை பாதுகாப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செப். 21ல் உலக அல்சீமர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.


தகவல் சுரங்கம்



அமைதியே தீர்வு

உலக அமைதி, நாடுகளிடையே போர், வன்முறை ஏற்படுவதை தடுக்கும் விதத்தில் ஐ.நா., சார்பில் செப்., 21ல் உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'சமமான நீடித்த உலகிற்காக சிறந்த முறையில் மீட்பு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. கொரோனா சூழலில் பணக்கார, வளர்ச்சியடைந்த நாடுகளில் தடுப்பூசி முழுமையான அளவில் செலுத்தப்படுகிறது. ஆனால் 100 நாடுகளில் ஒரு 'டோஸ்' தடுப்பூசி கூட செலுத்தப்படவில்லை. இவ்விஷயத்தில் தடுப்பூசி வசதியுள்ள நாடுகள், ஏழை நாடுகளுக்கு வழங்கி உதவ வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X