புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (22) | |
Advertisement
வேலுார்:வேலுாரில் உள்ள ஒரு பள்ளிக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்து கொண்டு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து ஆன் லைனில் கல்வி கற்று வந்தனர்.அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ேஹர் கட்டிங் செய்து அழகு

வேலுார்:வேலுாரில் உள்ள ஒரு பள்ளிக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்து கொண்டு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து ஆன் லைனில் கல்வி கற்று வந்தனர்.latest tamil news
அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ேஹர் கட்டிங் செய்து அழகு பார்த்தனர். இப்படி முடிவெட்டிக் கொள்பவர்களை புள்ளிங்கோ என்று அழைக்கப்படுகின்றனர்.கடந்த 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புக்கள் நடந்து வருகிறது. ஆனால் ேஹர் கட்டிங்கை மாற்றாமல் பள்ளிக்கு வந்தனர். இது மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கட்டிங் பற்றியே பேசிக்கொண்டிருந்ததால் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. புள்ளிங்கோ கட்டிங்குடன் வேலுார் அண்ணாசாலையில், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்.இது ஒழுங்கீனமாக இருப்பதால் இதை அகற்றி சாதாரணமாக கட்டிங் செய்து வரும்படி ஆசிரியர்கள் நெப்போலியன் மாணவர்களிடம் கூறினார். அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இனி சரி பட்டுவராது என நினைத்த தலைமை ஆசிரியர் நெப்போலியன் இன்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு முடி திருத்தும் தொழிலாளர்களை வரவழைத்தார். அப்போது புள்ளிங்கோ ஹேர் கட்டிங்குகளுடன் வந்த மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்து வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்தார்.அங்கு அவர்களுக்கு புள்ளிங்கோ ஹேர் கட்டிங்குகள் அகற்றி சாதாரணமாககட்டிங் செய்யப்பட்டது.


latest tamil news


ஆசிரியர் நெப்போலியன் நடவடிக்கைஇது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறியதாவது: நேற்று 11, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 120 பேருக்கு புள்ளிங்கோ அகற்றப்பட்டு சாதாரண கட்டிங் செய்யப்பட்டது. இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை 21ம் தேதி 9, 10 ம் வகுப்பு மணவர்களுக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தால் அவர்களுக்கும் முடி வெட்டப்படும். நல் ஒழுக்கம் பெற்ற நல்ல மாணவர்களாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பொது மக்கள் புள்ளிங்கோ கட்டிங்கை ஒருங்கீனமாக பார்ப்பதால் வேலுாரில் முடி வெட்டும் கடை வைத்திருப்பவர்கள் மாணவர்களுக்கு புள்ளிக்கோ மாடலாக முடி வெட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

புள்ளிங்கோ கட்டிங் என்றால், ஒருவரது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும் பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவது போன்ற கட்டிங். இதை பல மாடலில் செய்கிறார்கள். ஒருவருக்குபுள்ளிங்கோ கட்டிங் செய்ய 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Ravikumar - chennai ,இந்தியா
21-செப்-202111:29:59 IST Report Abuse
R Ravikumar எந்த ஊர் என்று தெரியவில்லை .. இதே புல்லிங்கோ கட்டிங் போட்ட ஒரு பத்தாம் வகுப்பு பையனை ஒரு போலீஸ் காரர் நிறுத்தி , சலூனிற்கு அழைத்து சென்று நார்மலாக கட்டி விட சொன்னார் . அவரை பணியிட மாறுதுல் செய்து விட்டார்கள் . மூடி வெட்டுவது அந்த பையனின் , பெற்றோரின் , சமூகத்தின் உரிமை யாம் . இதனை ஒரு சாதி பிரச்சினை ஆக்கி அந்த போலீஸ் காரரை தண்டித்து விட்டார்கள் . இந்த ஆசிரியர் ஒரு இடை சாதியை சேர்ந்தவர் என்றால் அவர் கவனமாக இருக்க வேண்டும் . இல்லை என்றால் ஒரு மாணவன் புகார் அளித்தாலும் சாதி பிரச்சினை ஆக்கி குளிர் காய்வார்கள் . எச்சரிக்கை . மற்ற படி ஆசிரியர் செய்தது பாராட்டுக்கு உரியது . மேலும் கட்டிங் ஐந்தாயிரம் எல்லாம் இல்லை .. கொடுக்கும் பணத்தில் இரு மடங்கு அவ்வளவே .. ஐந்தாயிரம் ரேட் எல்லாம் மேல்தரப்பு பெரிய கடைகளில் . எல்லா காலங்களிலும் இது இயல்பு தான் . தொண்ணுறுகளில் ராம்போ கட்டிங் , கல்நாயக் கட்டிங் என்று இப்போதைய மாமா , சித்தப்பாக்கள் சுத்தி கொண்டு இருந்தார்கள் . நன்றி .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-செப்-202105:29:09 IST Report Abuse
Bhaskaran அந்த காலத்தில் மாதம் தவறாது வீட்டுக்கு முடிதிருத்துபவர் வந்து திருத்துவார் .எங்கள் தந்தை பேப்பர் படித்துக்கொண்டிருப்பார் அவர் முன்னிலையில் எங்கள் சகோதரர்கள் அனைவர்க்கும் மகுடாபிஷேகம் நடக்கும் பெயருக்குகொஞ்சம் முடி இருக்கும் மற்றபடி மொட்டைதான் .ஒரே ஆறுதல் மறுநாள் பள்ளிக்கு சென்றால் கிட்டத்தட்ட முடி வெட்டி கொண்ட அனைவரும் ஒரேமாதிரி முக்கால் மொட்டையாக இருப்பார்கள்
Rate this:
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
21-செப்-202107:12:10 IST Report Abuse
 N.Purushothamanஅந்த மாதிரி பழக்கப்பட்டு வந்தததால இப்போவும் அதே மாதிரி தான் முடி வெட்டி கொள்கிறோம் ....இன்னமும் என் அம்மா இன்னும் கொஞ்சம் புடிச்சி வெட்டி இருக்கலாம்ன்னு சொல்லுவாங்க .....கடைக்காரரே இதுக்கு மேல வெட்டணும்ன்னா மொட்டை தான் அடிக்கணும்ன்னு சொன்னாரு சொன்னால் வேலை தெரியாதவருன்னு அவருக்கும் ஒரு பாட்டு விழும் .......
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
21-செப்-202105:28:50 IST Report Abuse
 N.Purushothaman என்னது ? முடி வெட்ட ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ஊவாயா ? அடேய் ......இந்த ஊதாரி பெற்றோர்களை கண்டறிந்து கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் உட்பட வேற ஏதாவது கடன் வாங்கி இருக்காங்களான்னு பாருங்க .....இவிங்க எல்லாம் ஏழை பெற்றோர்கள்ன்னு சொன்னா பூகம்பம் வந்துடும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X