புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புள்ளிங்கோ கட்டிங் உடன் பள்ளிக்கு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங்

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (22)
Share
வேலுார்:வேலுாரில் உள்ள ஒரு பள்ளிக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்து கொண்டு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து ஆன் லைனில் கல்வி கற்று வந்தனர்.அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ேஹர் கட்டிங் செய்து அழகு

வேலுார்:வேலுாரில் உள்ள ஒரு பள்ளிக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்து கொண்டு வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் ஹேர் கட்டிங் செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து ஆன் லைனில் கல்வி கற்று வந்தனர்.



latest tamil news




அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ேஹர் கட்டிங் செய்து அழகு பார்த்தனர். இப்படி முடிவெட்டிக் கொள்பவர்களை புள்ளிங்கோ என்று அழைக்கப்படுகின்றனர்.கடந்த 1ம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புக்கள் நடந்து வருகிறது. ஆனால் ேஹர் கட்டிங்கை மாற்றாமல் பள்ளிக்கு வந்தனர். இது மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த கட்டிங் பற்றியே பேசிக்கொண்டிருந்ததால் கல்வியில் ஆர்வம் காட்டவில்லை. புள்ளிங்கோ கட்டிங்குடன் வேலுார் அண்ணாசாலையில், திருமலை- திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர்.இது ஒழுங்கீனமாக இருப்பதால் இதை அகற்றி சாதாரணமாக கட்டிங் செய்து வரும்படி ஆசிரியர்கள் நெப்போலியன் மாணவர்களிடம் கூறினார். அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

இனி சரி பட்டுவராது என நினைத்த தலைமை ஆசிரியர் நெப்போலியன் இன்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு முடி திருத்தும் தொழிலாளர்களை வரவழைத்தார். அப்போது புள்ளிங்கோ ஹேர் கட்டிங்குகளுடன் வந்த மாணவர்களை வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்து வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்தார்.அங்கு அவர்களுக்கு புள்ளிங்கோ ஹேர் கட்டிங்குகள் அகற்றி சாதாரணமாககட்டிங் செய்யப்பட்டது.


latest tamil news





ஆசிரியர் நெப்போலியன் நடவடிக்கை



இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறியதாவது: நேற்று 11, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் 120 பேருக்கு புள்ளிங்கோ அகற்றப்பட்டு சாதாரண கட்டிங் செய்யப்பட்டது. இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாளை 21ம் தேதி 9, 10 ம் வகுப்பு மணவர்களுக்கு புள்ளிங்கோ கட்டிங் செய்திருந்தால் அவர்களுக்கும் முடி வெட்டப்படும். நல் ஒழுக்கம் பெற்ற நல்ல மாணவர்களாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில் இது போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பொது மக்கள் புள்ளிங்கோ கட்டிங்கை ஒருங்கீனமாக பார்ப்பதால் வேலுாரில் முடி வெட்டும் கடை வைத்திருப்பவர்கள் மாணவர்களுக்கு புள்ளிக்கோ மாடலாக முடி வெட்டக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

புள்ளிங்கோ கட்டிங் என்றால், ஒருவரது தலையின் பின் பக்கத்தில் ஒரு இடத்தில் மட்டும் பனங்காயை அரிவாளால் கொத்தி விடுவது போன்ற கட்டிங். இதை பல மாடலில் செய்கிறார்கள். ஒருவருக்குபுள்ளிங்கோ கட்டிங் செய்ய 5 ஆயிரம் ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகின்றது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X