ஏன் இந்த வீண் வேலை?| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

ஏன் இந்த வீண் வேலை?

Added : செப் 20, 2021
Share
ஏன் இந்த வீண் வேலை?'எவ்வளவு சொத்துக்களை குவித்தாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு மண்ணாசை மட்டும் போகவே போகாது' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், பீஹார் மாநில மக்கள். இங்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இவர், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின்

 அக்கம் பக்கம்


ஏன் இந்த வீண் வேலை?



'எவ்வளவு சொத்துக்களை குவித்தாலும் இந்த அரசியல்வாதிகளுக்கு மண்ணாசை மட்டும் போகவே போகாது' என, எரிச்சலுடன் கூறுகின்றனர், பீஹார் மாநில மக்கள். இங்கு முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. எதிர்க்கட்சி தலைவராக ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளார். இவர், முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகன்.
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைமை அலுவலகம் பாட்னாவில் பீர்சந்த் படேல் மார்க் என்ற இடத்தில் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு பக்கத்தில் அரசுக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. தங்கள் கட்சி அலுவலகத்தை விரிவு படுத்தப் போவதாகவும், அந்த காலி இடத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார் தேஜஸ்வி யாதவ். ஆனால் அந்த இடம் பாட்னா உயர் நீதிமன்றத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தேஜஸ்வி, 'அந்த இடத்தை எங்கள் கட்சிக்கு ஒதுக்காவிட்டால் மாநிலம் முழுதும் பிரமாண்ட போராட்டம் நடத்துவோம்' என,
அதிரடியாக அறிவித்தார். இது, ஆளும் தரப்பை உசுப்பேற்றி விட்டுள்ளது. 'எப்படிப்பட்ட போராட்டம் நடத்தினாலும் கவலையில்லை. அந்த இடத்தை உங்களுக்கு ஒதுக்க முடியாது' என, அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. பீஹார் மக்களோ, 'லாலு குடும்பத்துக்கு கட்சி அலுவலகம் கட்டுவதற்கு இடத்துக்கா பஞ்சம்; எதற்கு இந்த வீண் வேலை' என, கடுப்படிக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X