சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை. 'டோக்கன்' வழங்கி, 15 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்யாததால், கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளில் உள்ள தானியம் மழையால் முளை விட்டுள்ளது. பல இடங்களில் சாக்குப்பை, தார்பாய் இல்லை எனக்கூறி, கொள்முதல் நிலைய அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர்.'டவுட்' தனபாலு: மத்திய

'டவுட்' தனபாலு

அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி: பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் முழு அளவில் நடைபெறவில்லை. 'டோக்கன்' வழங்கி, 15 நாட்களுக்கு மேலாகியும் கொள்முதல் செய்யாததால், கொள்முதல் நிலையங்களில் மூட்டைகளில் உள்ள தானியம் மழையால் முளை விட்டுள்ளது. பல இடங்களில் சாக்குப்பை, தார்பாய் இல்லை எனக்கூறி, கொள்முதல் நிலைய அதிகாரிகள் தட்டிக் கழிக்கின்றனர்.

'டவுட்' தனபாலு: மத்திய அரசுக்கு எதிரான, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் அளவுக்கு, விவசாயிகளின் விளைச்சலுக்கு விலை கொடுக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு இல்லையோ என்ற, 'டவுட்' வருகிறது. அரசியல் காரணங்களுக்காக வரிந்து கட்டி, மத்திய அரசுக்கு எதிராக கொடி பிடிக்கும் மாநில அரசு, நம் மாநில விவசாயிகளை கைவிட்டு விட்டதோ என்ற, 'டவுட்'டும் வருகிறது!

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்: தொற்றால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் எண்ணிக்கை, 100க்கும் கீழ் தான். எனவே, 'மாணவர்களுக்கு தொற்று' என்று தேவைற்ற பீதியை ஏற்படுத்தக்கூடாது. ஒன்றரை ஆண்டுகளாக மன அழுத்தத்தில் இருந்த மாணவர்கள், இப்போது தான் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருகின்றனர்.

'டவுட்' தனபாலு: உண்மை தான். கொரோனா என்ற பூதம் இந்த உலகை விட்டு போகப் போவதில்லை. நாம் தான் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். எத்தனை காலத்திற்கு தான் பள்ளிகளை மூடி வைப்பது? எனவே, வீண் பீதி கிளப்பாதீர்கள் என்ற உங்களின் அறிவுரை, அனைவருக்கும் பொருந்தும் என்பதில், யாருக்கும், 'டவுட்'டே இல்லை!


சிவாச்சாரியார் சமூக நல சங்கத்தின் நிறுவனத் தலைவர் சுரேஷ்
: தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். 'மத வழிபாடுகளில் அரசு தலையிட கூடாது' என்ற அரசியல் அமைப்பு சட்டத்தை, தமிழக அரசு மதித்து நடக்க வேண்டும்.

'டவுட்' தனபாலு: ஹிந்து மதத்தை இஷ்டப்படி கையாள, இது என்ன, எடுப்பார் கைப்பிள்ளையா என்ற, 'டவுட்' வருகிறது. இதுபோல, முஸ்லிம் மவுல்விகள் நியமனம், கிறிஸ்துவ பாதிரியார்கள் நியமனம் போன்ற விவகாரங்களிலும் தமிழக அரசு இப்படி உத்தரவிடுமா அல்லது உத்தரவிடத் தான் முடியுமா? எனவே, பிற மதங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்திருப்பது போல ஹிந்து மதத்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இது அவசியமானது!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-செப்-202115:21:13 IST Report Abuse
D.Ambujavalli ஒவ்வொரு அறுவடை காலத்திலும் விவசாயிகள் இதே அவதியைத்தான் படுகிறார்கள் என்னவோ இந்த அரசு மட்டும் தான் அலட்சியம் காட்டுகிறது என்பதுபோல் விமர்சனம் வைக்கிறார் அதிகாரிகளும் லோக்கல் அரசியல்வாதிகளும் லஞ்சத்துக்காக செய்யும் இந்த ட்ரிக் எதுவும் தெரியாதவரா இவர் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X