சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ராமதாஸ் 'பாக்கெட்'டில் காரணங்கள்!

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ராமதாஸ் 'பாக்கெட்'டில் காரணங்கள்!என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க.,


ராமதாஸ் 'பாக்கெட்'டில் காரணங்கள்!



என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க., தவறி விட்டது...' இப்படி அடுக்கடுக்கான காரணங்களை செப்பியிருக்கிறார் ராமதாஸ்.
இதிலிருந்தே, ராமதாசுக்கு மனசாட்சியே இல்லை என்பது தெரிகிறது. பா.ம.க.,வின் நிர்பந்தம் காரணமாக, வன்னியருக்கு 12.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்.காரியம் முடிந்ததும், அ.தி.மு.க., தலைமைக்கு, 'பெப்பே' காட்டியுள்ளார், ராமதாஸ். அ.தி.மு.க., தலைமைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.
கூட்டணியில் சேர ஒரு காரணமும், விலக வேறொரு காரணமும், டாக்டர் ராமதாசின், 'பாக்கெட்டில்' எப்போதும் தயாராக இருக்கும்.சட்டசபையில் தி.மு.க.,வை பா.ம.க., 'ஆஹா ஓஹோ...' என புகழ்ந்து தள்ளுவதில் இருந்தே மருத்துவர் ராமதாசின் கபட நாடகம் அம்பலமாகி விட்டது.உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், ஓரிரு இடங்களில் மட்டுமே பா.ம.க., வெற்றி பெற முடியும். ராமதாசின் முடிவு, யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாக உள்ளது.
'அடுத்த சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்' என, அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து அக்கட்சியும் 'கழன்று' கொள்ள போகிறது என்பது.இந்த, 'தில்லாலங்கடி' வேலை எல்லாம் தெரிந்து தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார்.
அந்த தைரியம் எல்லாம் இப்போது இருக்கும் அ.தி.மு.க., தலைமைக்கு இல்லை.




பா.ஜ.,வினர் என்ன செய்கின்றனர்?



வ.சத்யதாரா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி' என்றும், திருக்குறளை மிக கேவலமாகவும் பேசிய ஈ.வே.ராமசாமிக்கு, பல கோடி ரூபாய் செலவில் சிலை அமைக்க போகிறதாம் தமிழக அரசு.அதுவும், நிதி பற்றாக்குறையால் அரசு தள்ளாடும் போது, ஒன்றும் உதவாத சிலையை பல கோடி ரூபாய் செலவு செய்து அமைப்பது, இப்போது எதற்காக?தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், தங்களிடம் உள்ள நிர்வாக திறன் இயலாமையை மறைப்பதற்காக, ஹிந்து கலாசாரத்தில், 'கை' வைக்கும் வேலையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
சிறுபான்மையினரை திருப்தி செய்வதற்காகவும், அவர்களின் ஓட்டுகள் நிரந்தரமாக கிடைப்பதற்காகவும் தி.மு.க., அரசு இது போன்ற அவலங்களை அரங்கேற்றி வருகிறது.கடந்த 1975ல், அப்போதைய பிரதமர் இந்திராவிற்கு இருந்த தைரியம், ஏன் தற்போதுள்ள பிரதமர் மோடிக்கு இல்லாமல் போய் விட்டது?தமிழகத்தில் ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு நடக்கிறது. மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், ஹிந்துக்கள் யாரும் இங்கே வாழ முடியாது என்பதே உண்மை.
பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் என்ன செய்கின்றனர் என்றே தெரியவில்லை. சிலர், தி.மு.க., அரசுக்கு பாராட்டு வேறு தெரிவிக்கின்றனர். மக்கள் பா.ஜ.,வை ஏன் தேர்ந்தெடுத்தனர் என்பது புரிந்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள்.


ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏன்?



கே.ஆர்.அனந்த பத்மநாபன், மாங்காடு, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள ஆளுங்கட்சி அஞ்சுவதற்கு காரணம், வரலாற்றில் உள்ளது.கடந்த 1984ல் நடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. ஆனால், 1985ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., பெருவாரியான இடங்களை கைப்பற்றியது.அதன்பின், 11 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. 1996ல் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., 'மெஜாரிட்டி' வெற்றி பெற்றது.அதே ஆண்டு உள்ளாட்சி தேர்தலை சந்தித்து, ஆறு மாநகராட்சிகளையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்றியது. மக்களே நேரடியாக மேயர்களை தேர்ந்தெடுத்தனர்.கடந்த 2001ல் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தது. அதே ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மூன்று மாநகராட்சிகளில் மட்டுமே அ.தி.மு.க., வெற்றி பெற முடிந்தது.
கடந்த 2006ல், தி.மு.க., தலைமையில் 'மைனாரிட்டி' அரசு அமைந்தது. அடுத்து நடந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர்களை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதை, எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பலமாக எதிர்த்தது.கடந்த 2011ல் அ.தி.மு.க., அதிக மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றது. அதே ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், மேயர்களை மக்கள் நேரடியாக தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. ஆறு மாநகராட்சிகளையும் அ.தி.மு.க., கைப்பற்றியது.கடந்த 2016ல் பெரும்பான்மையை விட, 21 இடங்கள் மட்டுமே அதிகமாக பெற்று அ.தி.மு.க., ஆட்சி அமைத்தது. அப்போது, கவுன்சிலர்கள் மூலமாக மேயரை தேர்ந்தெடுக்கும் முறை செயல்படுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது.ஜெயலலிதா மரணத்திற்கு பின், ஆளுங்கட்சியான அ.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அஞ்சியது. உள்ளாட்சி தேர்தல்நடத்த வேண்டும் என, தி.மு.க., வழக்கு தொடர்ந்தது.வேறு வழியின்றி, 2019ல் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் ஓரளவு சரிசமமான ஊராட்சிகளை கைப்பற்றின.இப்போது, பெரும்பான்மையை விட சற்று அதிகமான தொகுதிகளை கைப்பற்றி, தி.மு.க., ஆட்சியில் அமர்ந்துள்ளது. நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகள், உள்ளாட்சி தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமோ என தி.மு.க., அரசு அச்சத்தில் உள்ளது.
உள்ளாட்சி தேர்தல் விஷயத்தில் ஆளுங்கட்சிக்கு அச்சம் ஏற்படுவது, ஜனநாயகத்திற்கு நல்லது தான்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-செப்-202115:30:46 IST Report Abuse
D.Ambujavalli திமுகவில் சுவீட் பாக்ஸ்கள் இன்னும் அதிகம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பாக இருக்கும் தோற்றுப்போன பின் கூட மகனுக்கு ரா. ச சீட் வாங்கியாயிற்று, இனி கையைக் கழுவ வேண்டியதுதானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X