சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

தி.மு.க., நிர்வாகிகள் நியமனத்தில் சர்ச்சை!

Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
தி.மு.க., நிர்வாகிகள் நியமனத்தில் சர்ச்சை!''பிரதமர் கணக்குல போயிடக் கூடாதுன்னு தேதியை மாத்திட்டாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.''தமிழகத்துல 10 நாளைக்கு முன்னாடி, 'மெகா' தடுப்பூசி முகாம் நடத்துனாங்க... அதுல, 28 லட்சத்துக்கும் மேற்பட்ட 'டோஸ்' களை போட்டாவ வே... அடுத்து, போன 17ம் தேதி

டீ கடை பெஞ்ச்


தி.மு.க., நிர்வாகிகள் நியமனத்தில் சர்ச்சை!



''பிரதமர் கணக்குல போயிடக் கூடாதுன்னு தேதியை மாத்திட்டாவ வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.

''தமிழகத்துல 10 நாளைக்கு முன்னாடி, 'மெகா' தடுப்பூசி முகாம் நடத்துனாங்க... அதுல, 28 லட்சத்துக்கும் மேற்பட்ட 'டோஸ்' களை போட்டாவ வே... அடுத்து, போன 17ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடக்கும்னு
அறிவிச்சிருந்தாவ...

''ஆனா, அன்னைக்கு பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு, நாடு முழுக்க தடுப்பூசி முகாம் நடத்துறதா அறிவிப்பு வந்துட்டுல்லா... அந்த நாள்ல தமிழகத்துலயும் முகாம் நடத்துனா, தடுப்பூசி கணக்கெல்லாம் மோடி பிறந்தநாள் கணக்குல சேர்ந்துடும்னு யோசிச்சவங்க, முகாமை, 19ம் தேதிக்கு மாத்தி நடத்தி முடிச்சிருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.

''கூட்டணி கட்சியினரை, 'ஆப்' பண்ணிட்டு இருக்காங்க...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்
அந்தோணிசாமி.

''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''தி.மு.க., கூட்டணியில காங்கிரஸ், ரெண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., - ம.தி.மு.க.,ன்னு நிறைய கட்சிகள் இருக்கு... உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு தொடர்பா, அந்தந்த மாவட்டச் செயலர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் பேசி, இடங்களை பகிர்ந்து வழங்குங்கன்னு தலைமை
சொல்லிடுச்சுங்க...

''ஆளுங்கட்சி மாவட்ட நிர்வாகிகள் பலரும், தங்களது மனைவி, மச்சான், தம்பின்னு சொந்த, பந்தங்களுக்கு பல உள்ளாட்சி பதவிகளை குறிச்சு வச்சிருக்காங்க... அந்த மாதிரி இடங்களை கூட்டணி கட்சியினர் கேட்க கூடாதுங்கிறதால, அவங்களை அழைச்சு, 'வெயிட்'டா கவனிச்சு அனுப்பிடுறாங்க...'' என்றார்
அந்தோணிசாமி.

''அறிவாலய பஞ்சாயத்து ஒண்ணை கேளுங்க பா...'' என, கடைசி தகவலுக்கு வந்த அன்வர்பாயே தொடர்ந்தார்...

''சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க., மீனவர் அணிக்கு, சமீபத்துல ஆறு நிர்வாகிகளை நியமிச்சிருக்காங்க... ராஜ்யசபா எம்.பி.,, ஒருத்தரும், அறிவாலய நிர்வாகி ஒருத்தரும், 'சிண்டிகேட்' போட்டு, இந்த நியமனங்களை செய்திருக்காங்க பா...

''தி.மு.க.,வுல பெரும்பாலும், எந்த அணிக்கு நிர்வாகிகளை நியமிச்சாலும், அந்த மாவட்டச் செயலரின் பரிந்துரை அவசியம்... ஆனா, இந்த ஆறு நிர்வாகிகள் நியமனத்துல, மாவட்டச் செயலர் பரிந்துரையே இல்லாம செய்து
இருக்காங்க பா...

''இந்த விவகாரம், ஸ்டாலின் காதுக்கும் போயிடுச்சாம்... இப்ப, விசாரணைக்கு உத்தரவு போட்டுஇருக்கார்... விசாரணை முடிவுல, சம்பந்தப்பட்டவங்க மேல நடவடிக்கை பாயும்னு சொல்றாங்க பா...'' என, முடித்தார் அன்வர்பாய்.

''நேத்து நண்பர் ஜெயகுமார் ஆத்துக்கு போயிருந்தேன்... 'டிவி'யில பாரதி படம் ஓடிண்டு இருந்தது... என்ன அருமையான படம் தெரியுமோ... ரெண்டு பேரும் சேர்ந்து பார்த்தோம் ஓய்...'' என, குப்பண்ணா கூற, நண்பர்கள் பேச்சு சினிமா பக்கம்
திரும்பியது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SureshKumar Dakshinamurthy - Chennai,இந்தியா
21-செப்-202110:36:50 IST Report Abuse
SureshKumar Dakshinamurthy டுப்பூசி கணக்கெல்லாம் மோடி பிறந்தநாள் கணக்குல சேர்ந்துடும்னு யோசிச்சவங்க, முகாமை, 19ம் தேதிக்கு மாத்தி நடத்தி முடிச்சிருக்காவ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X