பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : செப் 20, 2021
Share
Advertisement
செப்., 21, 1927ஆந்திர மாநிலம் ஐதராபாதில் 1927 செப்., 21ம் தேதி பிறந்தவர், குருஜாதா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் என்ற ஜி.கே.வெங்கடேஷ். பாடகரான இவர், இசையமைப்பாளர்கள் எஸ்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரின் குழுவில் வீணை வாசிப்பவராக பணியாற்றினார்.மலையாளத்தில் நடிகை, கன்னடத்தில் சோதரி, தமிழில் மகளே உன் சமத்து ஆகிய படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.



இதே நாளில் அன்று

செப்., 21, 1927

ஆந்திர மாநிலம் ஐதராபாதில் 1927 செப்., 21ம் தேதி பிறந்தவர், குருஜாதா கிருஷ்ணதாஸ் வெங்கடேஷ் என்ற ஜி.கே.வெங்கடேஷ். பாடகரான இவர், இசையமைப்பாளர்கள் எஸ்.சுப்பையா நாயுடு, எஸ்.வி.வெங்கட்ராமன், சி.ஆர்.சுப்பராமன் ஆகியோரின் குழுவில் வீணை வாசிப்பவராக பணியாற்றினார்.மலையாளத்தில் நடிகை, கன்னடத்தில் சோதரி, தமிழில் மகளே உன் சமத்து ஆகிய படங்களின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என, 200க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது இசை குழுவில் இளையராஜா, எல்.வைத்தியநாதன் ஆகியோர் பணியாற்றினர். கிராமத்து மின்னல் உட்பட தமிழ் மற்றும் கன்னடத்தில் சில படங்களை தயாரித்துள்ளார். மெல்லத்திறந்தது கதவு, சிங்காரவேலன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 1993 நவ., 13ம் தேதி, தன் 66வது வயதில் காற்றில் கலந்தார்.
இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X