செப். 24-ல் பைடனை சந்திக்கிறார் பிரதமர் மோடி

Updated : செப் 21, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி :பிரதமர் மோடி 'குவாட்' மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப். 22-ல் அமெரிக்கா செல்கிறார். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன.இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி
 செப். 24-ல், பைடன், சந்திப்பு, பிரமதர் மோடி

புதுடில்லி :பிரதமர் மோடி 'குவாட்' மாநாடு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க செப். 22-ல் அமெரிக்கா செல்கிறார்.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து 'குவாட்' அமைப்பை உருவாக்கியுள்ளன.
இந்த அமைப்பின் மாநாடு அமெரிக்காவில் 24ம் தேதி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை மறுநாள் டில்லியில் இருந்து அமெரிக்காவுக்குப் புறப்படுகிறார். 23ம் தேதி அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களை சந்திக்கிறார்.


latest tamil news



இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்காவின் முதல் பெண் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோரையும் மோடி சந்தித்து பேச உள்ளார்.

இதைத் தொடர்ந்து 24ம் தேதி அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார். பின்னர் செப். 25ம் தேதி ஐ.நா., பொதுச் சபை கூட்டத்தில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202109:38:16 IST Report Abuse
பாமரன் ஹ்ம்ம் வயசான காலத்துல ஜோ பைடன் கொரோனோவில் இருந்து தப்பியிருக்கலாம் ஆனால் எங்காளு கட்டிப்புடி செஞ்சதும் இருக்குடி சீன்... விதி யாரை விட்டது...🙄
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
21-செப்-202106:18:39 IST Report Abuse
R.Kumaresan R.Kumaresan. வைரஸ், வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் காலம், இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்ற பிரதமர்களில் தற்போதிருக்கும் பிரதமர் நரேந்திரமோடிதான் அதிகமுறை வெளிநாடுகளுக்கு சென்று ஏதோ செய்திருக்கிறார் என்ன செய்தார் என்று தெரியவில்லை.. R.Kumaresan.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
21-செப்-202108:42:39 IST Report Abuse
vadiveluபிடித்ததை பார்ப்பதும், கேட்பதும் மட்டும் இருந்தால் அப்படிதான் தெரியும்.வலை தளங்களில் சென்று என்ன சாதித்தார் என்று பார்க்கவும், சிறிதாவது தெரியும்.தேவையில்லாமல் எந்த வெளி நடித்து தலைவர்களும் தங்கள் நேரத்தை செலவு செய்ய மாட்டார்கள்....
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-202122:20:24 IST Report Abuse
Vittalanand தாடி குறைக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X