5 -11 வயது குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி தயார்! அமெரிக்காவின் 'பைசர்' நிறுவன சோதனை வெற்றி

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வாஷிங்டன் :அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பைசர்' நிறுவனம், 5 - 11 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. உரிய ஒப்புதலுக்குப் பின், இது பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனாவுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.
5 - 11 வயது குழந்தைகள், கொரோனா தடுப்பூசி தயார்!  அமெரிக்கா,பைசர்  சோதனை வெற்றி

வாஷிங்டன் :அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் 'பைசர்' நிறுவனம், 5 - 11 வயது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி சோதனையை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அறிவித்துள்ளது. உரிய ஒப்புதலுக்குப் பின், இது பயன்பாட்டுக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனாவுக்கு எதிராக இந்தியா, அமெரிக்கா, சீனா உட்பட பல நாடுகளில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. இந்த தடுப்பூசிகள் பெரும்பாலும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கே செலுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பைசர் நிறுவனம், 12 - 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தடுப்பூசியை ஏற்கனவே தயாரித்துள்ளது. இந்நிலையில், 5 - 11 வயதுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனையை நடத்தி வந்தது. இந்த பரிசோதனை வெற்றிகரமாக அமைந்துள்ளதாக பைசர் நிறுவனத்தின் துணைத் தலைவரும், பிரபல குழந்தை மருத்துவ நிபுணருமான டாக்டர் பில் க்ருபர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த 'பயோ என் டெக்' நிறுவனத்துடன் இணைந்து, ஏற்கனவே 12 - 18 வயதுள்ள சிறுவர் - சிறுமியருக்கான தடுப்பூசியை தயாரித்து உள்ளோம்.தற்போது அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் அதிகரித்துள்ளது.


பெற்றோர் அச்சம்



அதனால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் இடையே அச்சமும், தயக்கமும் உள்ளது.கொரோனா வைரஸ் குழந்தைகளை அதிகம் தாக்காது என கூறப்படுகிறது. ஆனாலும், அமெரிக்காவில் மட்டும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டு, 460 பேர் உயிரிழந்துள்ளனர்.இதையடுத்து, 5 - 11 வயதுள்ளோருக்கான தடுப்பூசியை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தற்போது வழங்கப்படும் தடுப்பூசியில், மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு தடுப்பூசி செலுத்தி பரிசோதனை நடத்தப்பட்டது.

இவ்வாறு இரண்டு 'டோஸ்' தடுப்பூசி செலுத்தப்பட்ட குழந்தைகளிடம், சிறுவர் - சிறுமியருக்கு உள்ளதை விட அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது, பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.எப்.டி.ஏ., எனப்படும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதலுக்காக விரைவில் விண்ணப்பிக்க உள்ளோம்.

இந்த தடுப்பூசிக்கான விண்ணப்பம் கிடைத்த சில வாரங்களுக்குள் அனுமதி அளிப்பதாக எப்.டி.ஏ., ஏற்கனவே தெரிவித்துள்ளது. அதனால், மிக விரைவில் இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்து, பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம்.அதைத் தொடர்ந்து, ஐரோப்பிய நாடுகளின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.குழந்தைகளுக்கான இந்த தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. சாதாரண காய்ச்சல், கை வலி போன்ற பக்கவிளைவுகளே சிலருக்கு ஏற்படலாம். மொத்தத்தில் சிறு குழந்தைகளுக்கான தடுப்பூசி, கொரோனாவுக்கு எதிராக சிறப்பாகச் செயல்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


2 வயதுக்கு மேல்



பல நாடுகளில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் பணி நடந்து வருகிறது. ஆப்ரிக்க நாடான கியூபாவில், 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வழங்கும் பணி ஏற்கனவே துவங்கியுள்ளது. சீனாவிலும், 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, அமெரிக்காவைச் சேர்ந்த 'மாடர்னா' நிறுவனமும், பள்ளிக் குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிக்கும் பரிசோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. பைசர் மற்றும் மாடர்னா நிறுவனங்கள், ஆறு மாதக் கைக்குழந்தைகளுக்கான தடுப்பூசி தயாரிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளன.


அடுத்த மாதம் ஏற்றுமதி



மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று கூறியதாவது:நாட்டில் இதுவரை 81 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி 'டோஸ்'கள் மக்களுக்கு செலுத்தப்பட்டு உள்ளன. இதில், 10 கோடி டோஸ் 11 நாட்களில் போடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் உலக நாடுகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இந்தியா விளங்குகிறது.

முதலில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. மிக விரைவில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு விடும்.
உள்நாட்டு தேவைக்காக தடுப்பூசி ஏற்றுமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக இருக்கும் தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல், தடுப்பூசி ஏற்றுமதி துவங்கும்.அடுத்த மாதம் மட்டும் 30 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் தயாரிக்கப்படும். அடுத்த மூன்று மாதங்களில், 100 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் மத்திய அரசின் வசம் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, 'எய்ம்ஸ்' மருத்துவமனை இயக்குனர்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில், ''மக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க, அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்,'' என, மாண்டவியா வலியுறுத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
21-செப்-202106:10:44 IST Report Abuse
 Muruga Vel கோரோனோ வந்தவங்களுக்கு மருந்து கண்டுபிடிக்கிறது தானே தேவை ...எதுக்கு எல்லாருக்கும் போட்டுக்கணும் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X