எம்.பி., 'சீட்'டுக்கு ரூ.5 கோடி தேஜஸ்வியை விசாரிக்க உத்தரவு

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
பாட்னா ;லோக்சபா தேர்தலில் 'சீட்' தர, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019 லோக்சபா தேர்தலில் பாகல்பூர் தொகுதி,ராஷ்ட்ரீய ஜனதா
எம்.பி., 'சீட்'டு ரூ.5 கோடி தேஜஸ்வி விசாரிக்க உத்தரவு

பாட்னா ;லோக்சபா தேர்தலில் 'சீட்' தர, 5 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த பாட்னா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019 லோக்சபா தேர்தலில் பாகல்பூர் தொகுதி,ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு ஒதுக்கப்பட்டது.

இத்தொகுதியில் காங்., சார்பில் போட்டியிட 'சீட்' கேட்டு, 5 கோடி ரூபாய் கொடுத்ததாகவும், ஆனால் சீட் தராததுடன், வாங்கிய பணத்தையும் கொடுக்காமல் மோசடி செய்து விட்டதாகவும், சஞ்சீவ் குமார் சிங் என்பவர், பாட்னா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தேஜஸ்வி யாதவ், அவரது சகோதரியும், எம்.பி.,யுமான மிசா பாரதி, மாநில காங்., தலைவர் மோகன் ஜா, மறைந்த மாநில காங்., தலைவர் சதானந்த் சிங், அவர் மகன் சுபானந்த் முகேஷ், காங்., செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

இந்த மனுவை விசாரித்த பாட்னா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிபதி விஜய் கிஷோர் சிங், தேஜஸ்வி யாதவ், மிசா பாரதி உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டார். இந்த புகாரை மறுத்துள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள செய்தி தொடர்பாளர் மிருத்யுன்ஜய் திவாரி, ''காங்., சார்பில் சீட்டு கேட்டு எங்கள் கட்சி தலைவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டு இருப்பது வேடிக்கையாக உள்ளது,'' என்றார்.

ஆனால் பீஹார் காங்., தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து மவுனம் சாதிக்கின்றனர்.கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாகல்பூர் தொகுதியில் போட்டியிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி., சைலேஷ் குமார், ஐக்கிய ஜனதா தள வேட்பாளர் அஜய் மண்டலிடம் தோல்வி அடைந்தார்.



Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
enkeyem - sathy,இந்தியா
21-செப்-202117:26:40 IST Report Abuse
enkeyem அப்பன் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறு அடி பாய்ந்துள்ளது
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
21-செப்-202113:01:12 IST Report Abuse
Dhurvesh அப்போ இங்கே ஒரு MLA க்கு 13 கோடி என்று SV சேகர் சொன்னாரே , CT ரவி 500 கோடி செலவு என்கிறாரே இதற்க்கு விசாரணை கிடையாதோ , ஓ ஓகே எதிர்க்கட்சி என்றால் தான் சட்டம் தன் கடமையை செயுமோ
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-செப்-202105:43:25 IST Report Abuse
Indhuindian நியூஸ் போடும்போது முஷு பேரையும் போடுங்க ரொம்ப மிஸ்லீடிங் ஆகா இருக்கு அதே பேர்ல நெறய அரசியல் வாதிங்க இருக்காங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X