அடுத்தாண்டுக்கான பட்ஜெட் அக்., 12ல் துவங்குகிறது பணி

Updated : செப் 22, 2021 | Added : செப் 20, 2021
Share
Advertisement
புதுடில்லி :வரும் 2022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்., 12ம் தேதி துவங்குகின்றன.மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு அமைந்த பின் தாக்கல் செய்யப்படும் நான்காவது பட்ஜெட் இது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இது நான்காவது
அடுத்தாண்டு ,பட்ஜெட் அக்., 12ல் துவங்குது,  பணி

புதுடில்லி :வரும் 2022 - 2023 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அக்., 12ம் தேதி துவங்குகின்றன.மத்திய பட்ஜெட் அடுத்தாண்டு, பிப்., 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக மத்திய அரசு அமைந்த பின் தாக்கல் செய்யப்படும் நான்காவது பட்ஜெட் இது.

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இது நான்காவது பட்ஜெட்.இந்த பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பணிகள் அக்., 12ம் தேதி துவங்க உள்ளதாக, பொருளாதார விவகாரங்களுக்கான துறையின் பட்ஜெட் பிரிவு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நவ., இறுதி வரை பட்ஜெட் தயாரிப்புக்கான துவக்க பணிகள் நடக்கும். அதன் பின் ஒவ்வொரு துறைச் செயலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

பல்வேறு தொழில் துறைகளுடனும் மத்திய அரசு சார்பில் ஆலோசனை நடத்தப்படும்.கொரோனா வைரஸ் பரவல் மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளில் இருந்து தற்போது மீண்டு வரும் நிலையில், புதிய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், மக்களின் நுகர்வு தேவையை அதிகரித்தல், பொருளாதார வளர்ச்சியை மீண்டும் நிலைநிறுத்துதல் என, பல சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில், மத்திய அரசு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X