பொது செய்தி

இந்தியா

தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.12 ஆயிரம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 20, 2021
Share
Advertisement
நாசிக்,: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள இனிப்பு கடையில், தங்க கொழுக்கட்டை கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுதும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதன் 10ம் நாளில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடக்கும். கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் பந்தல் அமைக்க
தங்க கொழுக்கட்டை கிலோ ரூ.12 ஆயிரம்

நாசிக்,: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மஹாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள இனிப்பு கடையில், தங்க கொழுக்கட்டை கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாடு முழுதும் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இதன் 10ம் நாளில், விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு விமரிசையாக நடக்கும்.

கொரோனா பரவல் காரணமாக, விநாயகர் பந்தல் அமைக்க மஹாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களிலும் தடை விதிக்கப்பட்டது. எனவே, பிரமாண்ட விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடக்கவில்லை.

இந்நிலையில், மஹாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள, 'சாகர் ஸ்வீட்ஸ்' என்ற இனிப்பகத்தில் தங்க முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை விற்பனை செய்யப்பட்டது; கிலோ 12 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைப் போலவே வெள்ளி முலாம் பூசப்பட்ட கொழுக்கட்டை கிலோ 1,460 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இவை தவிர, 25 விதமான கொழுக்கட்டைகளும் அங்கு பரபரப்பாக விற்பனை செய்யப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X