அக்.,5ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அக்.,5ல் ஆஜராக செந்தில் பாலாஜிக்கு உத்தரவு

Updated : செப் 20, 2021 | Added : செப் 20, 2021 | கருத்துகள் (10)
Share
சென்னை :வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், புகார்தாரர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் நகலை பெற, அக்டோபர், 5ல் ஆஜராகுமாறு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கரூர் தொகுதியை சேர்ந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி; தற்போது மின் துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்குவரத்து துறை
 அக்டோபர், 5ல் ஆஜராக, செந்தில் பாலாஜி, கோர்ட், உத்தரவு

சென்னை :வேலை வாங்கி தருவதாகக் கூறி, பணம் மோசடி செய்தது தொடர்பான வழக்கில், புகார்தாரர்களின் ஒப்புதல் வாக்குமூலத்தின் நகலை பெற, அக்டோபர், 5ல் ஆஜராகுமாறு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் தொகுதியை சேர்ந்த, தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி; தற்போது மின் துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011 - 2015ல், அ.தி.மு.க., அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.அப்போது, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உட்பட நான்கு பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் ஆகியோர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., -- எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.


latest tamil news



இந்நிலையில், மோசடி தொடர்பாக மேலும் இரு வழக்குகளையும், மத்திய குற்றப் பிரிவு போலீசார் தொடர்ந்தனர். இதில் ஒரு வழக்கு முடித்து வைக்கப்பட்டது. மற்றொரு வழக்கில், செந்தில் பாலாஜி உட்பட 47 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, புகார்தாரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் பெறுவதற்காக, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆலிசியா முன், விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.இதையடுத்து, ஒப்புதல் வாக்குமூலத்தின் நகலை பெறுவதற்காக, செந்தில் பாலாஜி உட்பட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, அக்., 5ம் தேதிக்கு வழக்கு விசாரணையை, நீதிபதி ஒத்தி வைத்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X